For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி.. காப்பாற்ற சென்றவரும் பலியான சோகம்!

ஓசூர் அருகே பிரபல தனியார் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி- வீடியோ

    கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பிரபல தனியார் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சுச்சுருகாணப்பள்ளி கிராமத்தில் பிரபல தனியார் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் மூன்று பிரிவுகளாக 3000க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.

    Two employees dead by poisonous gas in a private company

    நேற்று இரவு பணிக்கு சென்ற படையப்பா, நாகேஷ் என்பவர்களை தொழிற்சாலையினுள் உள்ள 30 அடி உயர கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய கூறியுள்ளனர். எந்த உபகரணங்களின்றி கழிவறை தொட்டியை திறந்து உள்ளே சென்ற நாகேஷ் அலறியபடி மயங்கி விழுந்துள்ளார்.

    Two employees dead by poisonous gas in a private company

    இதனைக்கண்ட படையப்பா அவரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கியுள்ளார். இதில் படையப்பாவும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தார்.

    Two employees dead by poisonous gas in a private company

    இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    [ தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது? வானிலை மையம் தகவல்! ]

    படையப்பா, நாகேஷ் உயிரிழப்புக்கு நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்றும் போதிய உபகரணங்களின்றி பணியாற்றியதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி உடல்களை வாங்க மறுத்து, உறவினர்கள், நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Two employees dead by poisonous gas in a private company

    மேலும் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நிர்வாக அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    English summary
    Two employees dead by poisonous gas in a private company while cleaning tang at Hosur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X