மெரினாவில் குளித்த 2 மாணவர்கள் கடல் அலையில் சிக்கி பலி.. சடலங்களை தேடும் பணி தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடலில் குளித்த இரு மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மகன் நிவாஸ் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான்.

Two students dead in Merina

இந்நிலையில் நிவாஷ், தனது நண்பன் இம்ரான் உட்பட 7 பேருடன் இன்று மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு 7 பேரும் கடலில் குளித்து கொண்டு இருந்தபோது திடீரென எழும்பிய கடலலை நிவாஷ் மற்றும் இம்ரானை இழுத்து சென்றது.

இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை பிளஸ் 2 தேர்வு வெளியாக உள்ளநிலையில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2 students drowning in the Marina. The rescue squad and police have been involved in the search for their bodies in the wave of deaths.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற