தனியார் பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. 2 பெண்கள் அதிரடி கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்தில் பல்வேறு வழிகளில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு அனைத்து செக்போஸ்டுகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

Two women held in Nagapattinam for smuggling liquor

இது போல் சீர்காழி மதுவிலக்கு போலீசார் நந்தலாறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் வந்த இரண்டு பெண்களின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், 160 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த 2 பெண்களிடம் இருந்து மதுபாட்டில்கள் உடடினயாக பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரைக்கால் திருநகரியை சேர்ந்த சூரணா மற்றும் மைனர் வயது இளம் பெண் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two women were arrested for smuggling 160 bottles of liquor in bus.
Please Wait while comments are loading...