For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட நாய்களுக்கும் “அல்ட்ரா ஸ்கேன்” சிகிச்சை – திருச்சி அரசு கால்நடை மருத்துவமனையில் அறிமுகம்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அரசு கால்நடைகள் மருத்துவமனையில் நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதியதாக "அல்ட்ரா ஸ்கேன்" வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் 1903 ஆம் ஆண்டு முதல் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்கு, நாள்நோறும் 60 முதல், 80 நாய்களுக்கும், 30 முதல், 40 ஆடுகளுக்கும், 60 முதல், 80 மாடுகளுக்கும் வெளி நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Ultra scan treatment for dogs in Trichy

மேலும், எளிதில் பிரசவிக்க முடியாத மாடு, ஆடுகளை உள்நோயாளியாக அனுமதித்து அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக இங்கு நாள்தோறும் 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

நாய்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதற்காக, 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், நாய்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவு காயங்களுக்கு துல்லியமாக சிகிச்சை அளிக்க வசதியாக, திருச்சி பன்முக மருத்துவ மனையில் அல்ட்ரா ஸ்கேன் வசதி விரைவில் அறிமுகம் செய்யப் படுகிறது.

இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. உபகரணங்கள் வந்தவுடன் இதற்கான சிகிச்சை துவங்கிவிடும் என்று வரதராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

English summary
Ultra scan equipment fixed in Trichy government Veterinary hospital. It is used for treat the dogs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X