எச் 1 பி விசா விண்ணப்பம்.. அமெரிக்க தூதரகத்தின் முன் க்யூ ரெடி!

இதைத் தொடர்ந்து ஏராளமானோர் அமெரிக்க தூதரகம் முன்பு வரிசையில் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளுக்கான (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் அமெரிக்கத் தூதரகம் பெறத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் 2015-ம் நிதியாண்டின் விசா அனுமதிக்கான எண்ணிக்கை 65,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 7-ம் தேதிக்குள்ளாகவே இரு பிரிவுகளுக்கும் தேவையான விண்ணப்பங்கள் பெறப்படும் என்ற நிலையில் ரேண்டம் தேர்வு முறையில் இதற்கான எண்கள் தேர்வு செய்யப்படும் என்று தூதரகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தேர்வு செய்யப்படாத விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி அனுப்பப்படும்.
இதுமட்டுமின்றி அமெரிக்க முதுகலைப் பட்டம் அல்லது உயர்கல்வி குறித்து வரும் தனியார் விண்ணப்பங்களில் முதல் 20,000 விண்ணப்பங்கள் இந்த எண்ணிக்கையிலிருந்து விலக்கு பெறும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
பிரிமியம் செயலாக்க விண்ணப்பங்களும் அதிக அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குத் தகுந்தாற்போல் தங்களின் தேர்வுமுறைத் திட்டங்களை தூதரகம் செயல்படுத்தவுள்ளது. மொத்தம் 85,000 விசா அனுமதிகளுக்கு இந்த ஆண்டு 1,60,000 விண்ணப்பங்கள் வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது கடந்த 2012-ம் ஆண்டில் 1,34,000 ஆகவும், கடந்த ஆண்டு 1,24,000 ஆகவும் இருந்தது. இந்த விண்ணப்பங்கள் கடந்த 2001-ம் ஆண்டில் உயர்ந்த பட்ச அளவாக 2,01,000 ஆக இருந்ததாக யுஎஸ்சிஐஎஸ் குறிப்பிடுகின்றது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications