தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்குண்ணே.. வடிவேலு சொன்ன பதில்! பிரஸ் மீட்டில் வகுறு முட்டுதுனு கலாய்!
திருச்செந்தூர்: நடிகர் போண்டா மணிக்கு உதவுவீர்களா என்ற கேள்விக்கு வைகை புயல் வடிவேலு பதிலளித்துள்ளார். அது போல் தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்கு என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடிகர் வடிவேல் வந்திருந்தார். அப்போது அவர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பின்னாடி நின்றிருந்தவர்களை சற்று கேப் விட்டு நிற்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது உடனே யாரும் எதிர்பார்க்காமல் இருந்த போது பூரா வகுறு இடிக்குதுனு கலாய்த்தார். அப்போது அவரிடம் என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள் என கேட்டனர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
அதற்கு அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2, விஜய் சேதுபதியும் நானும் நடிக்கிறோம். இப்படி படங்கள் போய் கொண்டே இருக்கின்றன. முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்து வருகிறது என்றார். அப்போது அவரிடம் நடிகை போண்டா மணி கிட்னி பெயிலியரால் உதவி கேட்டுள்ளார், நீங்கள் செய்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர்.

வடிவேல்
அதற்கு வடிவேல் ஆமா செய்யணும், நல்ல பையன் என்றார். உடனே செய்தியாளர்கள் எந்த மாதிரியான உதவி செய்ய போறீங்க என கேட்டனர் அதற்கு பதில் சொல்லலை. உங்கள் கூட்டணியில் போண்டா மணி இருந்தாரே என ஒரு நிருபர் கேட்டதற்கு வடிவேல் காமெடியாக, என்னா கூட்டணி நாங்கள் என்ன அரசியல் கூட்டணியிலா இருந்தோம் என்றார்.

அரசியல்
இதையடுத்து நீங்கள் எப்போது அரசியலுக்கு வர போறீங்கன்னு கேட்டனர். அதற்கு அவர் நம்ம சினிமாவில் நடித்துவிட்டு மக்களை சந்தோஷப்படுத்திவிட்டு போவோம் என்றார். மேலும் தமிழகத்தில் ஆட்சி எப்படி உள்ளது என கேட்டதற்கு நன்றாக இருக்கிறது என்றார். பின்னர் கோயிலுக்கு வந்த மக்களுடன் சிறிது பேசிவிட்டு சென்றார்.

போண்டா மணி
நடிகர் போண்டா மணி, விவேக் சார் இருந்திருந்தா என்னை இப்படி விட்டிருக்க மாட்டார். ஆனால் வடிவேல் சார் எனக்கு போன் செய்து கூட பேசலை என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். போண்டா மணிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. உயிர் பிழைப்பதற்கு அவருக்கு டயாலிசிஸும் சிறுநீரக அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதற்குத்தான் போண்டா மணி பண உதவி கேட்டிருந்தார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி












Click it and Unblock the Notifications