For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தை எதிர்த்து மேல்முறையீடு: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் வழக்கில் பசுமைத் தீர்ப்பாயத்தினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த08.08.2013 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடுகளை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 29.03.2013 அன்று ஆலையை மூடிடவும், ஆலைக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்தி விடவும் பிறப்பிக்கப்பட்ட உத்திரவுகளை இரத்து செய்து ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பளித்தது.

டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்மை அமர்வு 08.08.2013 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குச் சாதகமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11.09.2013 அன்று வைகோ அவர்கள் சார்பில் இரண்டு மேல் முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மேல்முறையீடுகளில், முக்கியச் சட்ட வினாக்களை பொதுச்செயலாளர் எழுப்பி உள்ளார். அந்த பொதுவான முக்கிய சட்ட வினாக்கள் வருமாறு:

1. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆலையை மூடிட பிறப்பித்த உத்திரவை எதிர்த்து காற்று மாசு தடுப்பு மட்டும் கட்டுப்பாடு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு ஆணையத்தில் முறையீடு செய்யாமல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரடியாக மேல் முறையீடு செய்திருப்பது சட்டத்தின்பால் ஏற்புடையதா?

2. டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு சென்னை தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள்ள மேல் முறையீட்டைத் தனது அமர்வில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ள அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம், 2010 இல் அனுமதிக்கப்பட்டு உள்ளதா?

3. வழக்கில் கட்சியாக உள்ளவர்களுக்கு முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் அவர்களது கருத்தைக் கேட்காமல் டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வழக்கை விசாரணைக்காக சென்னை அமர்விலிருந்து டெல்லி அமர்வுக்கு மாற்றிக் கொண்டது இயற்கை நியதிகளுக்கு உட்பட்டதுதானா?

4. தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள பசுமைத் தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 226 கீழ் உயர்நீதிமன்றங்களுக்கும் அல்லது 136-இன்கீழ் உச்ச நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதா?

5. டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், மாசைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கடமையைக் கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்திரவுகளை ரத்து செய்ய உகந்த காரணங்களை தனது தீர்ப்பில் சொல்லியுள்ளதா?

6. டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் ஓர் ஆய்வுக் குழுவை அமைத்து அந்த ஆய்வுக் குழு ஆலையையும், அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து அந்த அறிக்கையைப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது இந்த வழக்கை முடித்து வைக்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளத் தக்கதா?

இந்த மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko hasfiled Civil Appeal before the Supreme Court against the order of the National Green Tribunal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X