மது விலக்கு கோரி வைகோ தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி, மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாலை 4 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களிலும் இந்தக் கட்சிகளின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவிதாக வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications