For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள நிவாரணம்.... குளம், கால்வாய் சீரமைத்த வைகோ, வேல்முருகன்; படகோட்டிய சீமான்...

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளம் கோரத்தாண்டவமாடும் நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தலைவர்களும் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். கடலூரில் ஒரு மாதகாலமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனும் அவரது சகோதரர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம் வசிக்கும் வளசரவாக்கம் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறா. வைகோ சென்னையில் தெருதெருவாக உணவு வழங்கியதோடு சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நிறைந்த கண்மாய் கரையை சீரமைத்துக் கொண்டிருக்கிறார்.

கடலூரில் தீபாவளியின் போது தொடங்கிய மழை ஒரு மாத காலமாக தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது. அப்போது தென்னாப்பிரிக்காவில் வேல்முருகன் இருந்ததால் அவரது சகோதரர் திருமால்வளவன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆரம்பித்தனர். இந்த பணிகள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அசரவைக்கும் களப்பணியில்

அசரவைக்கும் களப்பணியில்

தென்னாப்பிரிக்காவில் இருந்து வேல்முருகன் திரும்பிய பின்னர் வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட கையோடு வெள்ளம் கிராமங்களுக்குள் வந்து சேராமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டு வருகிறார்.

கால்வாய் வெட்டுதல்..

கால்வாய் வெட்டுதல்..

எந்த ஏரியில் இருந்து கிராமங்களுக்கு நீர் வருகிறதோ அந்த வெள்ள நீரை வெளியேற்றி, கால்வாய் அடைப்புகளை அகற்றி அவரது டீம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தலைவர் என்றாலே வெள்ளை சட்டை வேட்டியோடுதான் வெளியே வர வேண்டும் என்ற ஈகோ இல்லாமல் 'களப்பணியை' சளைக்காமல் செய்து வருகிறது வேல்முருகன் தலைமையிலான குழு.

பம்பரமாக வைகோ

பம்பரமாக வைகோ

இதேபோல் மதிமுக பொதுச்செயலர் வைகோ கட்சியின் சின்னத்துக்கு ஏற்ப பம்பரமாக சுழன்று வருகிறார். சென்னை, கடலூர், திருவள்ளூரில் தெருத்தெருவாக உணவு எடுத்துச் செல்லும் வண்டிகளில் ஏறி சென்று இடுப்பளவு நீரில் வேட்டியை மடித்துக் கொண்டு தலையில் உருமா கட்டிக் கொண்டு சோர்வே இல்லாமல் சுழன்று வருகிறார். கொசஸ்தலை ஆற்றை எட்டிப் பார்த்து அதன் வேகம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்த கையோடு சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் 17 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கண்மாய் கரையை மம்பட்டி எடுத்து சீரமைக்கும் பணியில் இறங்கிவிட்டார்.

படகோட்டியாக சீமான்

படகோட்டியாக சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு மூங்கில் படகை ஏற்பாடுசெய்து அதில் வளவசரவாக்கம் பகுதியில் மருந்து மற்றும் உணவுப் பொருட்களுடன் படகோட்டியபடியே சென்று வீடு வீடாக கொடுத்து வருகிறார். இன்று கூட எழுத்தாளர் விநாயகமுருகன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், சீமான் படகுடன் வந்து தமது தாயை மீட்டு திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தது குறித்து பதிவிட்டுள்ளார்.

News Alert: For the third day, the Sikh community in Chennai have been preparing and distributing Langar and helping rescue victims of the flooding.#ChennaiRains #SarbatDaBhalla #ChennaiFloods

Posted by Sikh Channel on Friday, December 4, 2015

மதங்களைக் கடந்து

இவர்கள் அல்லாமல் இஸ்லாமிய இயக்கங்கள், சீக்கியர்கள், மார்வாடிகள் என அனைத்து தரப்பினருமே வரிந்து கட்டிக் கொண்டு நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

தத்துவங்களை தாண்டி... (rss1.jpg plus periyart thidal.jpg 2 படங்களையும் ஒரே படமாக்க வேண்டும்)

தத்துவங்களை தாண்டி...

தத்துவங்களை தாண்டி...

கொள்கைகளில் நேர் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் ஆர்.எஸ். எஸ். இயக்கமும் திராவிடர் கழகமும் கடந்த ஒரு வார காலமாக வரிந்து கட்டிக் கொண்டு விடிய விடிய உணவு சமைப்பதும் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதுமான பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி

வாழும் வீட்டை மழை மூழ்கடித்துவிட்டபோதும் சோர்ந்துவிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை கொண்டு சேர்ப்பதில் நிஜஹீரோக்களாக வலம் வந்தனர் நடிகர் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி. இவர்கள் இப்போது கடலூருக்கும் விரைந்துவிட்டனர்.

மூத்த பத்திரிகையாளர்கள்

மூத்த பத்திரிகையாளர்கள்

இதேபோல் நிவாரண பொருட்கள் எங்கு தேவை, யாரை தொடர்பு கொள்வது, எப்படி செல்வது என்ற வழிகாட்டுதலை கடந்த ஒரு வாரகாலமாக இடைவிடாமல் சமூக வலைதளங்களில் சன் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி ஆசிரியர் Elumalai Venaktesan தலைமையிலான பத்திரிகையாளர் டீம் அசராமல் உழைத்துக் கொண்டே இருக்கிறது. சென்னை நகரில் எங்கு யாருக்கு என்ன தேவை? யார் என்ன பொருட்களுடன் எங்கே இருக்கிறார்கள்? யார் யாருக்கு உதவிகள் சென்றடைந்துவிட்டன என துரிதமாக செயல்பட்டு கொண்டே இருக்கிறது இவர்களது டீம்.

English summary
Tamil Nationalist leaders Vaiko, Velmurugan, Seeman busy with full swing in Rescue and Relief operations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X