தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.. காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மறைமலையடிகள் குறித்த கட்டுரையை அரங்கேற்றிய வைரமுத்து

  சென்னை: தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்று சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரையாற்றி இருக்கிறார்.

  தனியார் பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.

  Vairamuthu speaks about Tamil language issue in Chennai

  இந்த நிலையில் தற்போது சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரையாற்றி வருகிறார். இதில் வைரமுத்து மறைமலையடிகள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை' கட்டுரையை அரங்கேற்றம் செய்கிறார்.

  இதில் பேசிய வைரமுத்து ''தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அதிகார மையங்களில் இருந்து தமிழ் ஆள வேண்டும் '' என்றார்.

  மேலும் ''நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு தயங்குகிறது.வடமாநிலங்களில் இந்தியில் தீர்ப்பு சொல்லும்போது இங்கு தமிழில் சொன்னால் ஆகாதா?'' என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Vairamuthu speaks about Maraimalai Adikalar in Chennai. Most of VIP persons came Kamrajar buliding to listen to his speech.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற