பரோல்ன்னா.. ஷாப்பிங்கா? அரசியலை கொண்டு வந்து எங்க வச்சாங்க பாருங்க ராதிகா! #வாணிராணி
பரோல்ல வர்றதுன்னா ஷாப்பிங் போறதாக்கா என்று வாணி ராணி தொடரில் சசிகலாவை சீண்டியுள்ளார் ராதிகா.
Recommended Video

சென்னை: உடல்நலம் இல்லாமல் இருக்கும் கணவரை பார்க்க பரோலில் வந்த அக்கா வாணியைப் பார்த்து பரோல்னா ஷாப்பிங் போறதாக்கா என்று அப்பாவியாய் கேட்டார் தங்கை ராணி.
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா அவ்வப்போது ஷாப்பிங் சென்று வந்தார். இது பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியானது.
சமீபத்தில் கணவர் நடராஜனைப் பார்க்க பரோலில் வெளியே வந்தார் சசிகலா. இந்த இரண்டையும் கோர்த்து விட்டு வாணி ராணி சீரியலில் சீன் வைத்து டயலாக் வைத்து விட்டார்கள்.

ராதிகாவின் வாணி ராணி
சித்தி சீரியரில் தொடங்கி வாணி ராணி வரை இரவு 9.30 மணிக்கு அனைவரின் வீட்டு வரவேற்பரையிலும் ஆஜராகி விடுகிறார் ராதிகா. இல்லத்தரசிகள் மத்தியில் ராதிகாவிற்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வாணி ராணிக்கு வரவேற்பு
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘வாணி ராணி' சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர், இந்த சீரியல் 1500 எபிசோடுகளை எட்டிப்பிடிக்கப் போகிறது. குடும்ப சீரியல் என தொடங்கி மாமியார் மருமகள் வில்லத்தனம், கள்ளநோட்டு, வருமான வரி சோதனை என பல சீன்கள் வைக்கப்பட்டுள்ளன.

நிஜமான சோதனை
வாணி ராணி சீரியரில் பூமிநாதனின் கிரானைட் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சி ஒளிபரப்பாக சில நாட்களிலேயே ராதிகாவின் ராடான் நிறுவனத்திலும், அவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

பூமியை பார்க்க வந்த வாணி
இப்போது கதை பல திசைகளில் நகர்ந்து வாணி சிறையில் இருக்கிறார். அவரது கணவர் பூமிநாதன் விபத்தில் சிக்கி கண் பார்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க வாணி பரோலில் வந்திருக்கிறார்.
|
பரோல்னா ஷாப்பிங்கா
அக்காவை பார்த்த தங்கை ராணி... என்னக்கா உன்னைய ரிலீஸ் பண்ணிட்டாங்களா என்று கேட்க, ஒரு மணிநேரம் பரோலில் வந்திருக்கிறேன் என்கிறார். அப்போது ராணியோ, பரோல்னா, ஷாப்பிங் போவாங்களே அதுவா அக்கா என்று கேட்கிறார். இந்த வசனம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

வாணி ராணி முடிவு
வாணி ராணி சீரியல் இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடியவிருப்பதாக இந்த சீரியலின் நாயகி ராதிகாவே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ராதிகாவின் பேச்சு சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் இன்னுமொரு புதிய கதாபாத்திரமாக ராதிகா வருவார் என்று ஆறுதல் பட்டுக்கொள்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications