For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியுடன் நீடிக்கும் நட்பு: தலைமையை விமர்சிக்க வாசன் தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ள ஜி.கே.வாசன், காங்கிரசுடன் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையை தனது ஆதரவாளர்கள் விமர்சித்துப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜி.கே.வாசன் எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் திங்கட்கிழமையன்று புதிய கட்சியை தொடங்கினார். ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்ற கொள்கை மூலம் தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலே, புதிய அரசியல் பாதையை வகுத்து பணியாற்றுவோம்.

Vasan bars his supporters not to criticize Congress high command

மூப்பனார் கட்சி ஆரம்பித்த போது, அவருக்கு ஆதரவு அளித்ததுபோல் தமிழக மக்கள் எங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வாசனின் ஆதரவாளர்கள் பலர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசன், காங்கிரஸ் தலைமையை தனது ஆதரவாளர்கள் விமர்சித்துப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜி.கே.வாசன் எச்சரித்துள்ளார்.

கட்சியின் பெயர், சின்னம் ஆகியன தொடர்பான தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

English summary
G K Vasan has barred his supporters not to criticize the Congress high command as a goodwill manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X