முடங்கிய சென்னை-திருச்சி நெடுஞ்சாலை.. 2 கிமீக்கு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்! பரனூர் டோலில் அடிதடி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட அடிதடியால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து தினமும் பல லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தான் இன்று சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பாலு என்பவர் இன்று மாலை வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பாலு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

பரனூர் சுங்கச்சாவடியை வாகனம் அடைந்தது. அந்த சமயத்தில் பாஸ்ட் டேக் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பாலுவுடன் வந்தவர்கள் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
‛இன்று பிரசாரத்திற்கு கிளம்புறேன்’.. மோதலுக்கு நடுவே ஸ்டாலின் கூறியதும் ‛பெஸ்ட் ஆப் லக்’ சொன்ன ஆளுநர்
இதில் பாலுவுடன் வந்த முருகன் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலு, அவருடன் வந்தவர்கள் மற்றும் பிற வாகனங்களில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பரனூர் சுங்கச்சாவடி வழியாக வாகனங்களின் இயக்கம் என்பது முடங்கியது. இதனால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நின்றன. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பாலு மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தர்மபுரி பாமக வேட்பாளர் மாற்றம் ஏன்? அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா வெல்வாரா? பின்னணி
சம்பவம் தொடர்பாக காவல் நிலையம் வந்து புகாரளியுங்கள். மறியலால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி சிசிடிவி கேமரா ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு வாகனங்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கின. இந்த சம்பவம் பரனூர் சுங்கச்சாவடியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications