அறுக்கப்பட்ட தாலிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.. வேல்முருகன் திட்டவட்டம்
அறுக்கப்பட்ட தாலிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வேல்முருகன் தலைமையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரணியாக வந்தவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புள்ள போலீசாரை கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும். காக்கா, குருவிகளை போல இனபடுகொலை செய்த காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.
அறுக்கபட்ட தாலிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தூத்துக்குடியில் இருந்து கமாண்டோ படைகளை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.


Click it and Unblock the Notifications
