செவிடன் காதில் ஊதிய சங்கு... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... - விளாசும் விஜயகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வானிலை ஆய்வு மையம் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட ஆக்கப்பூர்வமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் கடந்த 10 நாள்களாக சென்னையில் கனமழை பெய்தது இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடிய வழியில்லை.

Vijayakanth slams ADMK government

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நாராயணபுரம் ஏரியை நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பார்வையிட்டார். இதையடுத்து வெள்ள நிவாரண பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தமிழகத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல் பருவமழை தொடங்குவதற்கு முன்பே இதுபோன்ற பாதிப்புகள் வரும் என்பதற்காகத்தான் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் இந்த அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எவ்வித முன்னெச்சரிக்கை பணிகளையும் செய்யவில்லை.

இதன் விளைவு ஒரு வார மழைக்கே தமிழகத்தின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. வானிலை ஆய்வு மையம் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.இனிமேலாவது மக்களுக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை இந்த அரசு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK General Secretary Vijayakanth urges state government to do precautionary measure as Metrological department has announced heavy rainfall.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற