For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிகட்டு நடத்த சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

விஜயகாந்த் எழுதியுள்ள கடிதம்:

ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாப்படுகின்ற ஒரு வீரவிளையாட்டாகும். இந்த விளையாட்டு அறுவடை மற்றும் பண்டிகை காலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விளையாட்டில் பங்குபெறும் காளைகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படுத்த படுவதில்லை அவற்றிற்கு போதுமான

vijayakanth wrote letter to modi

பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக அரசும் உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதோடு இந்த வீரவிளையாட்டுகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்கள் அதிக அளவு பணம் செலவு செய்து அதை பராமரிப்பதோடு, முறையான பயிற்ச்சியும் கொடுத்துவருகிறார்கள்.

நீண்ட நெடுங்காலமாக வரலாற்று பின்னணியோடு, தமிழரின் கலாச்சாரம் பண்பாட்டோடு கலந்த இந்த வீரவிளையாட்டை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
dmdk leader vijayakanth wrote letter to pm modi about jallikattu issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X