விழுப்புரத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நகைகளை பறித்த வந்த இரு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் அடிக்கடி வழைப்பறிகொள்ளைகள் நடந்து வந்தது. குறிப்பாக அவர் சாலையில் தனியாகச் செல்லும் பெண்களை குறிவைத்து அவர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதிகளில் பெண்கள் நடந்துசெல்லவே பயப்பட்டனர்.

இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் ஜெயக்குமார் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து தனிப்படை போலீசார் விழுப்புரம் லஷ்மிபுரம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கொள்ளையடிக்க வந்த தினேஷ் மற்றும் செல்வ கணபதி என்னும் இரு கொள்ளையர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 40 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Chain Snatching CCTV Video

தமிழகத்தில் கடந்த ஆறேழு வருடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகைகளை கொள்ளையடிப்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Viluppuram police was very keen on thieves and arrested two who indulged in chain snatching.
Please Wait while comments are loading...