விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம் - ஆக. 24ல் தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் குடவரை கோவில்களில் ஒன்றானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்
கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 10.10 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோவிலை வலம் வந்தது. இதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கான சிறப்பு பூஜையும், அங்குசதேவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்ற பின்னர் கொடி மரத்தில் வெண்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவீதி உலா
நேற்றிரவு இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் 2ம் நாளான நாளை முதல் 8ம் திருநாள் வரை ஒவ்வொரு நாளும் காலையில் உற்சவர் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

தேரோட்டம்
திருவிழாவின் 9ஆம் நாளான வரும் 24ஆம்தேதி தேரோட்டமும், அன்றைய தினம் இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
விநாயகர் சதுர்த்தி
விழாவின் முத்தாய்ப்பாக 10ஆம் நாளன்று ஆகஸ்ட் 25ஆம்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications