For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விந்தியா முதல் வெண்ணிற ஆடை நிர்மலா வரை அதிமுகவில் பிரச்சாரம்... திமுகவில் அண்ணாச்சி மட்டும்தான்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சினிமா நட்சத்திரங்களின் பிரச்சாரத்தை நம்பி திமுக இல்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டேட்மெண்ட் விட்டார் மு.க.ஸ்டாலின். அவர் ஆசைப்பட்டாலும் திமுகவில் பிரச்சாரம் செய்ய இப்போதைக்கு இமான் அண்ணாச்சியை விட்டால் வேறு சினிமா நட்சத்திர பேச்சாளர் யாரும் இல்லை.

அதிமுகவிலோ அதிரடி விந்தியா தொடங்கி ஆர்த்தி, செய்திவாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா, நாட்டுப்புறபாடகி அனிதா குப்புச்சாமி, நடிகர்கள் செந்தில், ஆனந்தராஜ், தியாகு, சுந்தரராஜன், பாலா, ராமராஜன் என காணும் இடங்களில் எல்லாம் நட்சத்திர பேச்சாளர்கள்தான்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், இரட்டை இலையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்தப்பக்கம் அப்படியே எட்டி பார்த்ததில் அவர்களின் பிரச்சாரம் காதோடு வந்து விழுந்தது.

விந்தியாவின் அதிரடி

விந்தியாவின் அதிரடி

பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் இரட்டை இலைக்கு வாக்களித்தால் நம்ம குடும்பம் நல்லாயிருக்கும் என்றும் உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம் மட்டும் நல்லாயிருக்கும் என்றார்.

கடைசி தேர்தல்

கடைசி தேர்தல்

கடைசி தேர்தல் கடைசி தேர்தல் என ஒவ்வொரு முறையும் கூறி ஏமாற்றி வரும் கருணாநிதிக்கு இதுதான் கடைசி தேர்தல் என பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும் எனவும் விந்தியா வேண்டுகோள் விடுத்தார்

பக்காவாதம் வந்த மாப்பிள்ளை

பக்காவாதம் வந்த மாப்பிள்ளை

காங்கிரஸ் கட்சி ஒரு பக்கவாதம் வந்த மாப்பிள்ளை. பக்கவாதம் வந்த மாப்பிள்ளைக்கு 10 பொண்ணை கொடுத்த மாதிரி, ஒரு தொகுதியில கூட ஜெயிக்காத காங்கிரஸ் கட்சிக்கு எதுக்கு 41 தொகுதி என்றும் கேட்டார் விந்தியா.

ஆனந்தராஜ்

ஆனந்தராஜ்

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்பி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிமுக ஆட்சியில் மட்டுமே பாதுகாப்பு உள்ளதாகவும், இதை யாரலும் மறுக்க முடியாது என்றார்.

லியாகத் அலிகான்

லியாகத் அலிகான்

தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்த திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில் திரையுலகம் கோமா ஸ்டேஜில் இருந்தது என்றும், கோமா ஸ்டேஜில் இருந்த திரையுலகத்தை குணப்படுத்தியர் முதல்வர் ஜெயலலிதா என்று தெரிவித்தார்.

தர்மதேவதை

தர்மதேவதை

தர்மதேவதையை வீழ்த்த எத்தனை எதிரிகள் ஒன்று சேர்ந்தாலும், அத்தனையையும் வீழ்த்தும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கு உண்டு லியாகத் அலிகான் பேசிய போது கூட்டத்தில் விசில் பறந்தது.

சுந்தரராஜன்

சுந்தரராஜன்

ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து பேசிய திரைப்பட இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், ,
தேமுதிக தலைவர் உளுந்தூர்பேட்டையில் வெற்றி பெற்று மதுரையில் பதவி ஏற்பதாக கனவு காண்பதாக விமர்சனம் செய்தார்.

அரிசிகடை வைக்கலாம்

அரிசிகடை வைக்கலாம்

கடைசியில் மதுரையில் நிஜத்தில் அரிசி கடைதான் வைக்க முடியும் என்றார். அதில் விஜயகாந்த் எக்ஸ் எம்எல்ஏ என போர்டு வேண்டுமானால் வைத்து கொள்ளலாம் என்றும் ஆர்.சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

வெண்ணிற ஆடை நிர்மலா

வெண்ணிற ஆடை நிர்மலா

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சியின் சிறப்புகளையும், 5 ஆண்டுகால சாதனைகளையும் எடுத்து கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி சிங்கிளாக பிரச்சாரம் செய்து வருகிறார். பாளையங்கோட்டை, திருநெல்வேலி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய இமான் அண்ணாச்சி, `சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க.. திமுகவுக்கு ஓட்டுப்போடுங்க.. உதயசூரியனை மறந்துராதீங்க.. அப்புறம் வருத்தப்படாதீங்க' என்று டிவி நிகழ்ச்சியில் பேசுவதைப் போல பேசி வாக்கு சேகரிக்கிறார்.

English summary
The ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has roped in an assorted set of film and television personalities, star campaign in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X