For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பழங்கால கார்களின் அணி வகுப்பில் எம்ஜிஆரின் டாட்ஜ் கிங்ஸ்வே!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னையில் நடந்த பழங்கால கார்களின் அணிவகுப்பில் அமரர் எம்ஜிஆர் பயன்படுத்திய டாட்ஜ் கிங்ஸ்வே கம்பீரமாக வலம் வந்தது.

மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், 10-வது ஆண்டு, பாரம்பரிய பழைய கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பல விஐபிக்களின் பாரம்பரியமான பழைய கார்கள் பங்கேற்றன.

பின்னர், காலை 9 மணியளவில், கார்களின் அணிவகுப்பை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் தசாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அணிவகுப்பில் கலந்து கொண்ட கார்கள் டான்போஸ்கோ பள்ளியில் இருந்து புறப்பட்டு ஸ்பர்டான் சாலை, கல்லூரி சாலை, பாந்தியன் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தன.

அதன் பிறகு, கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதில் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய, 1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான ‘டாட்ஜ் கிங்ஸ்வே' கார் (பதிவு எண்: எம்.எஸ்.எக்ஸ். 3157), திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் பயன்படுத்திய, 1952-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான ‘போர்டு பெர்பெக்ட்' கார்(எம்.எஸ்.பி. - 9282) உள்ளிட்ட பல கார்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும், பாரம்பரியம் மிக்க நிறுவனங்களின் 24 மோட்டார் சைக்கிள்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பாரம்பரியம் மிக்க பழமையான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர். பெரும்பாலானவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் ஆகியோர் பயன்படுத்திய கார்களை ரசித்து பார்த்ததுடன் அவற்றின் அருகில் நின்று புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

கண்காட்சியில் இடம்பெற்ற கார்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்து அவற்றில் சிறந்த கார்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.

English summary
Vintage car rally 2014 was held on Sundat in Chennai, Egmore Don Bosco School.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X