சென்னையில் கஞ்சா செடியோடு ஃபேஸ்புக்கில் படம் போட்ட இளைஞர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்கள் கைது- வீடியோ

  சென்னை: ஃ பேஸ்புக்கில் கஞ்சா செடியுடன் செல்ஃபி போட்ட வாலிபர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

  ஃபேஸ்புக்கில் கஞ்சா உடன் போட்ட புகைப்படம் வைரலானது. இது குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் சம்பந்தப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

  Viral selfie with ganja plants puts 2 men arrest in Chennai

  ராயப்பேட்டை வி.எம்.தெருவை சேர்ந்த சசிகுமார்,22 என்பவரே புகைப்படத்தை பதிவிட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்,
  திருவல்லிக்கேணி நீலம் பாஷா தெருவை சேர்ந்த நண்பர் கமல் வீட்டின் மொட்டை மாடியில் பூந்தொட்டியில் விதைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக கூறினார்.

  ஒருநாள் கமல் வீட்டிற்கு நான் சென்ற போது, கஞ்சா செடியை பார்த்தேன் கஞ்சா செடியுடன் செல்பி எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி படம் எடுத்துக்கொண்டேன். மேலும், நண்பர் கமலையும் புகைப்படம் எடுக்க சொல்லி படம் எடுத்தேன். பிறகு, கெத்துக்காக கஞ்சா செடியுடன் எடுத்த படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தேன் என்று கூறினார்.

  சசிகுமார் கொடுத்த தகவலின் படி கமலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருப்பதால் சரியாக கஞ்சா கிடைப்பதில்லை. இதனால் கஞ்சா செடி வளர்க்க முடிவு செய்தேன். அதன்படி நான் கஞ்சா செடி வளர்த்து வளர வளர அதன் இலைகளை பறித்து யாருக்கும் தெரியாமல் உலர்த்தி அதை பொடி செய்து சிகரெட்டில் பயன்படுத்தி வந்தேன், என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கஞ்சா செடிகளை வளர்த்ததாக கமலையும், கஞ்சா செடியுடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த சசிகுமாரையும் போலீசார் கைது செய்தனர்.

  இதே போல கடந்த வாரம் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்த சார்லஸ் பிரதீப் என்பவர் தனது வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் கடந்த ஜனவரி மாதம் சார்லஸ் பிரதீப் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் பூஞ்செடிகளுடன் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். பின்னர் சார்லஸ் பிரதீப் மீது தடை செய்யப்பட்ட போதை செடிகள் வளர்த்தது உள்ளிட்ட 2பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The city police arrested a man after a selfie that went viral on Facebook showed him growing cannabis plants yield ganja or marijuana on his terrace garden in Royapettah.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற