விராலிமலையில் குண்டுகளை தேடி எடுத்த போலீசாரால் பரபரப்பு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: விராலிமலைப் பகுதிகளில் இருந்த வெடிகுண்டுகளை போலீசார் தேடிக் கண்டுபிடித்து எடுத்துச் சென்றதால் பரபரப்பு உண்டானது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள விராலிமலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு ராக்கெட் சில மாதங்களுக்கு முன்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

 Viralaimalai police identified bombs with the help of bomb squad

அப்போது வெடிக்காமல் போன குண்டுகளை ராணுவ வீரர்கள் அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு வந்த போலீசார் விராலிமலைப் பகுதி முழுவதும் தேடியலைந்து, 10க்கும் மேற்ப்பட்ட வெடிக்காத குண்டுகளை நிபுணர்களின் உதவியுடன் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, வெடிகுண்டு எனத் தெரியாமல் மணப்பாறை அருகே பழைய இரும்புக்கடையில் அதை இருவர் உடைக்க முயற்சித்தபோது ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Trichy, Viralaimalai police identified bombs with the help of bomb squad. The bombs are left when the army got training there.
Please Wait while comments are loading...