கனமழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு... பொதுமக்கள் மகிழ்ச்சி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூர் அனையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது விநாடிக்கு 8,150 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 39 அடியிலிருந்து 41 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு கடும் வறட்சி நிலவியதால் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, அணை நீர் குட்டையில் தேங்கியிருப்பது போல் இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் சிறிது சிறிதாக நீர்மட்டம் உயர்ந்து தற்போது 41 அடியை எட்டியுள்ளது. ஆனால், மொத்த கொள்ளளவான 120 அடியை 2013, 2014ஆம் ஆண்டுகளில் எட்டியது போல இந்தாண்டும் எட்ட வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

குறுவை சாகுபடிக்கு தேவைப்படும் நீர் தற்போது திறந்துவிடப்படவில்லை. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநாடிக்கு 7000 கன அடி நீரே திறந்துவிடப்படுகிறது. ஆனால் இதேபோல் கனமழை சின தினங்களுக்குத் தொடர்ந்தால் அணையின் நீர்மட்டம் 50ச தவீதமாவது நிறைய வாய்ப்புகள் உள்ளன என பொதுமக்கள் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to heavy rain in cauvery catchment area, water level of Mettur dam is increasing from 39 feet to 41 feet.
Please Wait while comments are loading...