வட சென்னைவாசிகளே.. 2 நாள் தண்ணீர் வராதாம்.. வேஸ்ட் பண்ணாம யூஸ் பண்ணுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடசென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் 11ம் தேதி காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

காட்டுப்பள்ளி கடல்நீர் சுத்தகரிப்பு நிலைய பராமரிப்பு பணியால் குடிநீர் வராது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Water supply to cut parts of North Chennai

மாதவரம், மணலி, படேல்நகர், திருவொற்றியூர், எர்ணாவூர், கொடுங்கையூருக்கு குடிநீர் வராது என்று தெரிவித்துள்ளது. கத்திவாக்கம், கண்ணதாசன் நகர், ராதாகிருஷ்ணன் நகர் பகுதிக்கும் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அவசர தேவைக்கு கீழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் - 8144930201

மணலி - 8144930615

மாதவரம் - 8144930206

தண்டையார் பேட்டை - 8144930254

Water Release at Kelevarapalli Dam-Oneindia Tamil

தலைமை அலுவலம் புகார் பிரிவு - 044-45674567 044-28454040 and 044-28451318

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Metrowater officials have requested the public requested to store sufficient quantity of water in advance.Owing to this work, there will be no Metrowater piped water supply from 10am on August 10 to 10am on August 11 in North Chennai.
Please Wait while comments are loading...