இரு அணிகள் இணைவதில் முட்டுக்கட்டையா… எங்கள் தரப்பிலா.. நெவர்.. ஓபிஎஸ் திட்டவட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்துள்ள ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைவதில் எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளவுபட்டது. பின்னர், சசிகலா குடும்பம் ஓரம் கட்டப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் முயற்சிகளை மேற்கொண்டன.

We are always ready to talk, says OPS

சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தொடங்குவதிலேயே பிரச்சனை எழுந்தது.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் பழனிசாமி அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த தலா 7 பேர் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டன. ஆனாலும், இரு அணிகளும் முறைப்படியான பேச்சுவார்த்தையை தொடங்காமல் ஒரு அணியை மற்றொரு அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இரு அணிகளும் இணைவதில் எங்கள் தரப்பில் இருந்து எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We are always ready to talk with EPS team, said O. Panneerselvam in Chennai Airport.
Please Wait while comments are loading...