டெல்டா மாவட்டங்களில் நாங்கதான் கெத்து... திவாகரன் மகன் ஜெயானந்த் ஷாக் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்டா மாவட்டங்களில் நாங்கதான் கெத்து என்கிற தொனியில் திவாகரன் மகன் ஜெயானந்த் பேட்டியளித்துள்ளார்.

இந்தியா டுடே டிவி சேனலுக்கு ஜெயானந்த் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் ஜெயானந்த் கூறியுள்ளதாவது:

நாங்கள் பரம்பரையாகவே பணக்காரரர்கள். எங்களுக்கு மற்றவர்களின் சொத்து எதுவும் தேவை கிடையாது. பிறரது சொத்துகளை விரும்பவில்லை.

திமுகவினர் கூட...

திமுகவினர் கூட...

இன்னும் சொல்லப் போனால் திமுகவினர் கூட டெல்டா மாவட்டங்களில் எங்களை விமர்சிக்கமாட்டார்கள். எங்களை என்பது நான், என் தந்தையை குறிப்பிடுகிறேன்.

வருமான வரி வழக்கு

வருமான வரி வழக்கு

டெல்டா மாவட்டங்கள் என்பது தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, திருச்சி மாவட்டங்கள். என் தந்தை திவாகரன் மீது வருமான வரித்துறை தொடர்ந்த ஒரு வழக்குதான் நிலுவையில் இருக்கிறது.

கருணாநிதி தூண்டுதல்

கருணாநிதி தூண்டுதல்

அந்த வழக்கு கூட காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் போடப்பட்டது. அதுவும் திமுக தலைவர் கருணாநிதியின் தூண்டுதலால் அந்த வழக்கு போடப்பட்டது.

டெல்டாவே கட்டுப்பாட்டில்?

டெல்டாவே கட்டுப்பாட்டில்?

இவ்வாறு ஜெயானந்த் பேட்டியளித்துள்ளார். ஜெயானந்தின் இந்த பேட்டி, டெல்டா மாவட்டங்களில் தாங்கள்தான் எல்லாமும் என கெத்தைக் காட்டுவது போல் இருக்கிறது என்கின்றனர் அதிமுகவின் ஓபிஎஸ் கோஷ்டி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala's nephew Jeyanandh Dhivakaran said that their family controlled the Delta Districts.
Please Wait while comments are loading...