For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் வேண்டாம்.. ஈபிஎஸ் வேண்டாம்... ஒன்லி யுபிஎஸ் மட்டும் போதும்! # Powercut

தலைநகர் சென்னையில் மின்வெட்டு பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இப்போதைக்கு யுபிஎஸ் மட்டும் போதும் என்று பலரும் வேண்டிக்கொள்கின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விடிய விடிய மின்வெட்டு விடிந்த பின்னரும் கரண்ட் வந்தபாடில்லை. இப்போதைக்கு எங்களுக்கு ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் வேண்டாம் யுபிஎஸ் மட்டும் போதும் என்று கெஞ்சாத குறையாக பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

அரசியல்வாதிகள் ஆடும் கூத்து கரண்டுக்கு தெரியுமா? கடன் கட்டவில்லை என்று பியூஸ் பிடுங்கப்பட்டதாக ஒரு சாரார் சொல்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட. ஆனால் மின்துறை அமைச்சரோ வேறு ஏதோ ஒரு காரணம் கூற மொத்தத்தில் பாதிக்கப்பட்டது என்னவோ மக்கள்தான்.

டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை சாடியும், மின்வெட்டு பிரச்சினையைப் பற்றியும்தான் பக்கம் பக்கமாக பதிவிட்டுள்ளனர். அதில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம்.

யுபிஎஸ் போதும்

ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் வேண்டாம்... இப்போதைக்கு யுபிஎஸ் மட்டும் போதும் என்று ஆதங்கத்தோடு கூறுகின்றனர் மக்கள் என்று தனது பதிவை போட்டுள்ளார் ஒரு வலைஞர்.

மின்வெட்டு

மின்வெட்டு யுபிஎஸ் வாழ்க ஓபிஎஸ் அப்புறம் ஈபிஎஸ்மும் அப்புறம் வாழ்க என்று பதிவை ஆதங்கத்தோடு போட்டுள்ளார் ஒரு டுவிட்டர்வாசி.

பியூஷ்

வல்லூர் மத்திய தொகுப்பு அனல்மின் நிலையத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தமிழகஅரசு செலுத்தாததால் பியூஸ் புடுங்கிடாங்களாம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

பினாமி அரசு

தமிழக தலைநகரத்தில் தூங்கவிடாமல் செய்யும் இரவு நேர மின்வெட்டு போலவே ஆளும் பினாமி அரசு கவிழும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

கரண்ட் தயாரிக்கிறாரா?

மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு இல்லை..தமிழக அரசு செலுத்த வேண்டிய 1135 கோடி ருபாய் கடனை செலுத்தாததால் தான்.இனி இப்படி தான் ஆனால் நம் மக்களுக்கு இதுவும் பழகிப்போகும் என்று கூறியுள்ளார் தமிழன் பிரச்சன்னா.

English summary
Power cut issue, For Current Situation Of Chennai people dont want OPS and EPS UPS is enough.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X