அரசியலுக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார்? ரஜினி முன்பு இருக்கும் மூன்று வாய்ப்புகள் இவைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்று நீண்ட காலமாக இருக்கும் கேள்விக்கு சூசகமாக பதிலளித்துள்ள ரஜினிக்கு அரசியலில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் சில கணிப்புகளைக் கூறுகின்றனர்.

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? இந்த கேள்வி புதுசு இல்லை.. தமிழகத்தில் 21 வருடமாக உலாவரும் கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் இருந்தது நடிகர் ரஜினிகாந்தின் நேற்றை பேச்சு.

தயாராக இருங்கள்.. போர் வரும்போது களம் காண்போம் என்று ரசிகர்களை தொண்டர்களாக மற்றும் போக்கை சுட்டிகாட்டியுள்ளார் ரஜினிகாந்த். உண்மையாலுமே அரசியல்களம் காண்பது குறித்து ரஜினியின் மனதில் என்ன இருக்கிறது? ரஜினியின் பாணியில் சொல்லவேண்டும் என்றால் அதுவும் கடவுளுக்குத்தான் தெரியும்.

இப்போ இல்லாட்டி எப்போ?

இப்போ இல்லாட்டி எப்போ?

ஆனால் அரசியல் குறித்து இது வரை ஆண்டவன் தான் முடிவு செய்வான் என்று கூறி வந்த ரஜினிகாந்த், நேற்று அதிரடியாக தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார். அப்படியானால் அவர் போர் எனச் சொல்வது தேர்தலையோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

ரஜினிக்கு இப்போது 67 வயதாகிறது, இப்போது அரசியல் பிரவேசம் எடுக்காவிடில் அவருக்கு அரசியல் பயணம் என்பது சிறப்பாக அமையாது என்று ரசிர்கள் கருதுகின்றனர்.

'போர்' என்றால் தேர்தலா?

'போர்' என்றால் தேர்தலா?

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் சட்டமன்றத் தேர்தல் வரும் என பாஜக, அதிமுக (ஓ.பன்னீர்செல்வம் அணி), திமுக, தேமுதிக உள்ளிட்ட அனைவருமே சொல்லி வருகின்றனர். எனவே சட்டமன்ற தேர்தலோ, பாராளுமன்றத் தேர்தலோ இரண்டில் ஏதோ ஒன்றில் தலைவர் ரஜினி அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என்று கருதுகின்றனர் ரசிகர்கள். ரசிகர்களின் விருப்பம் ஒரு பக்கம் இருக்க ரஜினியின் முன்பு உள்ள அரசியல் வாய்ப்புகள் என்ன என்பதை அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு அடுத்தபடியாக தேசிய கட்சிகளின் ஆட்சி என்பது இது வரை நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. இதனால் தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசில் இணைந்து தேசிய கட்சி என்ற அங்கீகாரத்துடன் ரஜினி தமிழக அரசியலில் நுழைய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை அப்படி ரஜினி போட்டியிட்டால் பாஜக+ரஜினி கூட்டணியை தமிழக மக்கள் எப்படி பார்க்கப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

இரண்டாவது வாய்ப்பு

இரண்டாவது வாய்ப்பு

எந்த கட்சியிலும் இணையாமல் சொந்த ஒரு கட்சியைத் தொடங்கி அதன் மூலம் மக்களின் மனநிலையை அறிந்து அதன் பின்னர், தேர்தலை சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி அரசியலில் நுழைவது என்பது புதிய விஷயம் அல்ல திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அவருக்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்தனர். இன்றளவும் எம்ஜிஆருக்காக ஓட்டு போடும் மக்கள் வாழும் நாட்டில் தான் நாம் இருக்கிறோம். எனவே ரஜினியின் அரசியல் பயணமும் அப்படி தனிக்கட்சி தொடங்கி ஆலமரமாக வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மற்றொரு வாய்ப்பு

மற்றொரு வாய்ப்பு

ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் செல்வாக்கு இருந்தாலும் அவர் மக்களுக்கு நேரடியாக செய்த உதவிகள் என்ன என்ற கேள்வியும் அவரது அரசியல் பிரவேசத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இது வரை ரசிகர் மன்றத்தினர் மூலமே சில நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இந்நிலையில் முதலில் ஒரு இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் மக்களை நேரடியாக அணுகி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மக்களின் அபிமானத்தை பெற்று அதன் பின்னர் அரசியலில் நுழையலாம் என்றும் கருதுகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth's year long political entry slightly got green signal raises the political opportunities for him in tn politics
Please Wait while comments are loading...