For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி, ஜக்கர்பர்க், இளவரசர் வில்லியம் இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சீன புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் மற்றும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஆகியோர் சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் சீனர்கள் தங்களின் புத்தாண்டை கொண்டாட நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சீனர்களின் புத்தாண்டு விலங்குகளின் பெயரை கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது பிறப்பது ஆடு புத்தாண்டு ஆகும்.

இந்த புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி

சீன மக்கள் அனைவருக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, வளம் ஏற்படட்டும் என்று மோடி சீன மொழியான மாண்டரினில் வாழ்த்தியுள்ளார்.

ஜக்கர்பர்க்

ஜக்கர்பர்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சீன மொழியில் தான் வாழ்த்து கூறும் வீடியோவையும் அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இளவரசர் வில்லியம்

இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் வீடியோ மூலம் சீன மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் சீன மொழியில் பேசியுள்ளார்.

சீன மொழி

சீன மொழி

சீன மொழியில் வாழ்த்தியது தான் மோடி, ஜக்கர்பர்க் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோருக்கு இடையே உள்ள ஒற்றுமை ஆகும்.

English summary
PM Modi, Facebook founder Mark Zuckerberg and Prince William have wished the Chinese ahead of their new year in Mandarin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X