தட்டி தூக்கிய சிம்பு... பாஜகவை மெர்சலாக்கிய முத்தான வரிகள் இதுதாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்பு மீது பாஜகவினர் திடீர் கோபம். வீட்டுக்கு பாதுகாப்பு- வீடியோ

சென்னை: பணமதிப்பிழக்கு எதிராக நடிகர் சிம்பு பாடி பாஜகவை மெர்சலாக்கிய அந்த வைர வரிகள் இதுதான்.

நடிகர் சிம்பு நடிக்கும் தட்றோம் தூக்றோம் படம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதில் பணமதிப்பிழப்பினால் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை நடிகர் சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

 What was the song sung by STR?

படம் வெளிவருவதற்கு முன்பே இந்த பாடல் வெளியாகியுள்ளது. அதில் மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு எதிராக சிம்பு பாடிய வரிகள் பாஜகவை கோபமடைய செய்துள்ளது. அந்த வரிகளை நீங்களும் படித்து மகிழுங்கள்.

காந்தி நோட்டு ரெண்டும் அம்பேல் ஆகி போயாச்சு
வாழ்க்கை ஏடிஎம்மில் அஸ்கு புஸ்கு ஆயாச்சு
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவில் வந்தாச்சு
காத்து கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு
நடுத்தரத்த.. நல்லா வச்சு செஞ்சாச்சு...
சில்லறைக்குதான் டங்குவாரு அந்தாச்சு
மலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க
ஃபாரீ...னுதான் போயாச்சு

நோ கேஷ்... கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
நோ கேஷ்... கேள்வி கேட்காம கொண்டாடலாம்
பண்ட பரிமாற்றம் பழகிக்கெல்லாம்
கண்ணே தொறக்காம படம் பார்க்கலாம்

ஃபேக்கு நோட்டு போல் வாழ்க்கை மாறி போயாச்சு
பிரேக்கிங் நியூஸ பாத்து
லூசு மோஷன் ஆயாச்சு
வெள்ள மனசு சேத்த பணம்
செல்லாமலேயே போயாச்சு
கருத்த மனசு சேத்த பணம்
வெள்ளை கலர் ஆயாச்சு
குடிமகனா ஒத்துழைப்ப தந்தாச்சு
கண்டபடிக்கு நம்பிகையா வச்சாச்சு
வரிசையில பெரிசு சிறுசு எல்லாருமே நின்னாச்சு
முடிஞ்சுதுனு நெனச்சாக்கா ஜிஎஸ்டி வந்தாச்சு
நோ கேஷ் கார்ட ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

ஏழை வீட்டில் இருப்பதெல்லாம்
சிவப்பு பணமடா
குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா
நாட்ட மாத்த வேணுமுனு
நீங்க நெனச்சா
கோட்டு போட்ட குண்டர்களின் சங்கப்புடிங்கடா

நோ கேஷ்... கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
நோ கேஷ்... கேள்வி கேட்காம கொண்டாடலாம்
பண்ட பரிமாற்றம் பழகிக்கெல்லாம்
கண்ணே தொறக்காம படம் பார்க்கலாம்

டீமானிடைசேஷன் டீமானிடைசேஷன் டீமானிடைசேஷன்
மாறும்மா நம்ம நேஷன்
கேள்வி கேட்டா போலீஸ் ஸ்டேஷன்
இது கோலுமாலு குளேபலைசேஷன் ஆயாச்சு
இது கோலுமாலு குளேபலைசேஷன்
இது கோலுமாலு குளேபலைசேஷன்
இது கோலுமாலு குளேபலைசேஷன்
ஒரே கன்பியூஷன்.... என்ன வாழ்க்கைடா இது

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here are the lyrics of Demonetization Anthem which was sung by Simbu T.Rajendar in Thatrom Thookrom filmfor which the shooting is in progress.
Please Wait while comments are loading...