சசிகலாவின் "வேற" மாதிரி போராட்டம் என்னவாக இருக்கும்?.. பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வரை நாம் பொறுமையாக இருந்தோம். நாளை முதல் வேறு மாதிரி போராடுவோம் என்று நேற்று கூறியிருந்தார் சசிகலா. இந்த நிலையில் அவரது வேறு மாதிரி போராட்டம் என்னவாக இருக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

நேற்று சற்றே தனது கோபத்தை தனது வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தினார் சசிகலா. போயஸ் தோட்டத்தில் கூடிய தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசும்போது, நாம் ஓரளவுக்கு மேல் பொறுமை காக்க முடியாது. செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், நாம் இன்று வரை பொறுமையாக இருந்தோம். நாளை முதல் வேறு மாதிரி போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார்.

What will be Sasikala's next move?

அவரது இந்தப் பேச்சுக்கள் பெருத்த சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையிலானது என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது. ஆனால் தனது பேச்சு குறித்து இதுவரை சசிகலா விளக்கம் ஏதும் தரவில்லை.

இந்த நிலையில் அவர் என்ன மாதிரியான போராட்டத்தில் அடுத்து ஈடுபடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. அவர் என்ன செய்யப் போகிறார், அவரது பேச்சின் உள் அர்த்தம் என்ன என்ற விவாதமும் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது. கீழ்க்காணும் முடிவுகளில் ஒன்றை சசிகலா எடுக்கலாம் என்ற ஊகமும் கச்சைக் கட்டிப் பிறக்கிறது.

ஜெயலலிதா சமாதியில் போய் உண்ணாவிரதம் இருக்கலாம்
ஆதரவு எம்.எல்.ஏக்களோடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடலாம்
டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடலாம்
நீதிமன்றத்தில் ஆளுநரின் அமைதிக்கு எதிராக வழக்குப் போட முயற்சிக்கலாம்

இதெல்லாம் அமைதியான முறையிலான நடவடிக்கைகள். இதில் எதையாவது சசிகலா செய்யப் போகிறாரா என்று தெரியவில்லை. அதேசமயம், இதைத் தாண்டி அவர் என்ன மாதிரியான போராட்டத்தில் ஈடுபடப் போகிறார் என்பது சத்தியமாக யாருக்குமே புரியவில்லை. அதையும் சசிகலாவே சொன்னால்தான் உண்டு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
What will be Sasikala's next move?, this is the million dollor question among the people in the state in her quest to capture the power.
Please Wait while comments are loading...