அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்துல மழை பிச்சு வாங்கும்... வாட்ஸ்அப்பில் பரவும் அறிக்கை உண்மைதானுங்கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வானிலை ஆய்வு மையம் வார்னிங்! -வீடியோ

  சென்னை : இந்திய வானிலை மையம் நவம்பர் 3ம் தேதி வரையிலான வானிலை முன்அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 26ம் தேதி தொடங்கியது. தொடக்க நாளிலேயே நல்ல பிள்ளையார் சுழி போட்ட மழை. பின்னர் ஒரு வாரம் அமைதியாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்டு வருகிறது. மாலையில் வெளுத்து வாங்கிய மழை பின்னர் இரவு முழுவதும் அவ்வபோது தலைகாட்டிவிட்டு மறைந்தது.

  இன்று காலை முதலே மழை பிச்சு வாங்கி வருகிறது. அவ்வபோது இடியும் இடிப்பதால் பள்ளி, அலுவலகம் செல்வோர் அவதிக்கு ஆளாகினர். ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. மழை காரணமாக சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

   மழை நீடிக்கும்

  மழை நீடிக்கும்

  இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலேயே ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

   வேகமாக பகிரப்படும் அறிக்கை

  வேகமாக பகிரப்படும் அறிக்கை

  இதனிடையே மழையின் பீதி சென்னை மக்களின் கண்ணில் 2015 பெருமழையை நினைவுபடுத்தி வருகிறது. இன்று காலை முதலே மழை எப்படி ட்ரெண்டிங்காக இருக்கிறதோ அதே போல வாட்ஸ் அப்பிலும் ஒரு வானிலை முன் எச்சரிக்கைத் தகவலும் படுஸ்பீடாக பகிரப்பட்டு வருகிறது.

   உண்மை அறிக்கை தான்

  உண்மை அறிக்கை தான்

  ஆனால் அது உண்மை தானா என்ற அச்சமும் பலருக்கு உள்ளது. உண்மையிலேயே அந்த வானிலை முன் எச்சரிக்கை அறிவிப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தான் வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்தே இந்தத் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

   கனமழை எச்சரிக்கை

  கனமழை எச்சரிக்கை

  எல்லோரும் பீதியடையும் வகையில் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது தான் அடுத்த கேள்வியாக இருக்கும். அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரையிலான வானிலை முன்எச்சரிக்கை தான் அது. அக்டோபர் 29ல் நாகாலந்து, மணிப்பூர். மிசோரம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   அச்சத்தில் மக்கள்

  அச்சத்தில் மக்கள்

  இதே போன்று அக்டோபர் 30 அதாவது இன்று முதல் நவம்பர் 3 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த வானிலை எச்சரிக்கை குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் 5 நாட்களுக்குத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இந்த வாட்ஸ் அப் ட்ரெண்ட் அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Indian metrology deparment's warning about next 5 days weather prediction is a real warning to Tamilnadu people and the statement roaming in Whats app is real.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற