For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரியாதையே இல்லையே... ஜவடேகரைச் சந்தித்தபோது கொட்டித் தீர்த்த விஜயகாந்த்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னை வந்து சந்தித்தபோது கூட்டணி தொடர்பாக பேசியதை விட பாஜக மேலிடம் தன்னை மதிக்கவே இல்லை என்று கூறிப் புலம்பினாராம் விஜயகாந்த்.

இப்படி செஞ்சுட்டாங்க, அப்படி செஞ்சுட்டாங்க.. இது என்ன நியாயம் என்று லிஸ்ட் போட்டு அடுக்கி விட்டாராம் விஜயகாந்த். கூடவே பிரேமலதா, சுதீஷ் ஆகியோரும் குறைகளை நீட்டி முழக்கியுள்ளனர் ஜவடேகரிடம்.

இந்த சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் தரப்பு எதுவும் பேசவில்லையாம். பாஜக தரப்புதான் வந்துருங்கு, வந்துருங்க என்று கெஞ்சி விட்டு வந்துள்ளதாம்.

இந்தப் பக்கம் 3.. அந்தப் பக்கம் 3

இந்தப் பக்கம் 3.. அந்தப் பக்கம் 3

விஜயகாந்த்தின் வீட்டுக்கு ஜவடேகர் சென்றபோது அவருடன் தமிழிசை, மோகன்ராஜுலு ஆகியோரும் உடன் இருந்தனர். அதேபோல விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் இருந்தனர்.

விஜயகாந்த்தின் பொறுமல்

விஜயகாந்த்தின் பொறுமல்

ஜவடேகரிடம் எடுத்த எடுப்பிலேயே பாஜகவினர் தன்னை மதிக்கவே இல்லை என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம் விஜயகாந்த். குறிப்பாக டெல்லி மேலிடத்தை அவர் புரட்டி எடுத்து விட்டாராம்.

வர்றதில்லை, பேசுறதில்லை

வர்றதில்லை, பேசுறதில்லை

டெல்லியிலிருந்து எந்த மத்திய அமைச்சர் வந்தாலும் என்னை வந்து பார்ப்பதில்லை. பேசுவதில்லை. மரியாதைக்குக் கூட வருவதில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும்தான் வருகிறார்கள்.

மாடா உழைச்சோமே

மாடா உழைச்சோமே

கடந்த லோக்சபா தேர்தலின்போது தேமுதிகவினர்தான் தீவிரமாகப் பிரசாரம் செய்தனர், தேர்தல் பணியாற்றினர். ஆனால் தமிழக பாஜகவினர் மட்டுமே எங்களை மதிக்கின்றனர். டெல்லிமேலிடம் மதிப்பதேஇல்லை.

ஷாவை வரச் சொல்லுங்கள்

ஷாவை வரச் சொல்லுங்கள்

இனிமேலும் உங்களுடன் பேசுவதாக இல்லை. பேசுவதாக இருந்தால், மோடி, அமீத் ஷா ரேஞ்சுக்குத்தான் பேச முடியும். அவர்களைக் கூட்டி வாருங்கள் பேசலாம் என்று தடாலடியாக கூறி விட்டாராம் விஜயகாந்த்.

திணறுகிறது பாஜக

திணறுகிறது பாஜக

விஜயகாந்த் இப்படிக் கொட்டித் தீர்த்து விட்டதால் பாஜக மேலிடம் திணறிப் போயுள்ளதாம். இருந்தாலும் அது கண்டு கொள்ளாமல்தான் இருப்பதாக சொல்கிறார்கள். மாநில பாஜக தலைவர்கள்தான் தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க ரொம்ப பிரயாசைப்படுகிறார்கள்.

காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை

காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை

இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வளவோ தேவலாம். திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது எந்த விஷயமாக இருந்தாலும் கருணாநிதியைக் கலக்கத் தவறியதில்லை காங்கிரஸ் மேலிடம். யாராவது ஒருதலைவரை அனுப்பி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது காங்கிரஸ்.

அந்த வகையில் பாஜக ரொம்ப மோசம்தான்!

English summary
When union Minister Prakash Javadekar met DMDK leader Vijayakanth he slammed the BJP high command for not giving respect to him and his party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X