For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடேங்கப்பா.. நாஞ்சில் சம்பத் அடித்த பல்டிகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நாஞ்சிலாரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!- வீடியோ

    சென்னை: அதிமுகவுக்கு தலைமையேற்கும் தகுதி சசிகலாவுக்கு உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நாஞ்சில் சம்பத் பின்னர், சசிகலா அணியில் சேர்ந்து அவரையும், டிடிவி தினகரனையும் வானளாவ புகழ்ந்து பேசி வந்தார்.

    திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுக கட்சியை ஆரம்பித்த பிறகு, அந்த கட்சி கொள்கை பரப்பு செயலாளர் பதவி வகித்தவர் நாஞ்சில் சம்பத்.

    இதன்பிறகு, வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்தார். இது அரசியல் ரீதியாக முதல் பல்டி.

    ஜெயலலிதா மரணம்

    ஜெயலலிதா மரணம்

    இந்த நிலையில் ஜெயலலிதா, 2016 டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதன்பிறகு சசிகலா தலைமையில் அதிமுகவினர் ஒன்றிணைந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் தலைமையைத் தவிர வேறு தலைமையை ஏற்க முடியாதவர்கள் அதிமுகவில் இருந்து விலக ஆரம்பித்தனர். சில காலம், அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக நாஞ்சில் சம்பத் எந்த வித பேட்டியும் தராமல் ஒதுங்கியிருந்தார்.

    தகுதி உள்ளதா

    தகுதி உள்ளதா

    பின்னர் ஜனவரி முதல் வாரம் செய்தியாளர்களிடம் மனம் திறந்த அவர், அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறதா? என்பதை சசிகலா நிரூபிக்க வேண்டும் என்றார். தீவிர இலக்கிய பணியில் இறங்கப் போவதாகவும் அவர் கூறினார். இப்படி அதிமுகவில் இருந்து ஒதுங்குவதை போல ஒரு பல்டி பேட்டியளித்தார் அவர்.

    திடீரென சேர்ந்தார்

    திடீரென சேர்ந்தார்

    ஆனால், பின்னர் சசிகலா அணியில் இணைந்து அவரை புகழுரை கூறி பேசி வந்ததோடு, தினகரனை ஆஹோ, ஓஹோவென புகழ்ந்தார். சசிகலாதான் அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றார். அது மட்டுமா, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை என்னவெல்லாம் கூறி விமர்சனம் செய்தார் தெரியுமா?

    இங்கும் விலகல்

    இங்கும் விலகல்

    ஆனால், இன்று திடீரென தினகரன் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, பழையபடி, இலக்கிய மேடையில் பார்க்கலாம் என்ற பல்லவியையும் பாட ஆரம்பித்துவிட்டார். நாஞ்சில் சம்பத்தின் இந்த அந்தர் பல்டிகளை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

    English summary
    Nanjil Sampath, who questioned whether Sasikala was entitled to lead the AIADMK, later joined Sasikala team and praised her and the TTV Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X