தண்ணீரை எப்போது வெளியேற்றுவாங்க, பள்ளிகளை எப்ப திறப்பாங்க.. குழப்பத்தில் பெற்றோர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை எப்போது அகற்றுவது என்றும் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாள் அன்று முதல் இன்று வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் போக வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கியது.

பள்ளி வளாகங்களில்...

பள்ளி வளாகங்களில்...

இதனால் பள்ளி வளாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் புறநகரில் உள்ள பள்ளிகளில் ஏராளமான தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் கனமழை காரணமாக இன்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சான்று கோரிய ஆட்சியர்

சான்று கோரிய ஆட்சியர்

சென்னை ஆட்சியர் அன்புசெல்வன் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் பள்ளிகள் வழக்கம்போல் துவங்கும்போது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கவில்லை என உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் நன்கு உள்ளது என்பதையும், வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி சான்றளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காலஅவகாசம்

காலஅவகாசம்

பள்ளிகளில் தண்ணீரை வெளியேற்றியதற்கான சான்று கோரியுள்ளதால் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்துள்ளது. மேலும் நாளை பள்ளிகள் திறக்கப்படுமானால் இன்றுக்குள் அனைத்து பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுமா என்ற சந்தேகம் அடைந்துள்ளனர். ஒரு நாளைக்குள் தண்ணீரை வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் என்பதால் அதற்காக மேலும் காலஅவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற குழப்பம் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After first stage of North East Monsoon, rain water is logged in school premises. Parents are confused when will be the schools reopened and also the rain water pumped out?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற