மோடியை எதிர்த்து போராட்டங்கள்.. எந்தெந்த தலைவர்கள் எங்கு கைதானார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மோடிக்கு எதிராக சென்னையில் இன்று பல்வேறு அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எந்தெந்த தலைவர்கள் எங்கே கைது செய்யப்பட்டனர் என்பதை பார்க்கலாம்.

  Where the leaders arrested in Chennai?

  ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

  சென்னை திரிசூலத்தில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அவரை போலீசார் கைது செய்தனர். விமான நிலையத்தின் எதிரே பாரதிராஜா தலைமையிலான திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்களை கொண்ட தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் தர்ணா நடைபெற்றது. அங்கே அவர்களை போலீசார் கைது செய்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The protests were launched by various organizations today in Chennai against Prime Minister Modi, denouncing the delay in setting up the Cauvery Management Board. Let's see where the leaders were arrested.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற