யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் 100% அர்ப்பணிப்பு வேண்டும்: நடிகர் விவேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அரசியலுக்கு வந்தபின் 100 சதவீத அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் போதுப்பட்டியில் செயல்படும் கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது, ஜனநாயக நாடு. ரஜினி, கமல், இந்தியாவில் பிறந்தவர்கள், இம்மண்ணின் மைந்தர்கள், என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.

who ever can come to politics: Actor Vivek

மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருப்பதால், ரஜினி, கமலை அரசியலுக்கு வருவதை ஆவலுடன், ஆர்வத்துடன் பார்க்கின்றனர் என்றும் அவர் கூறினார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலுக்கு வந்த பிறகு, 100 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன், காமராஜர், கக்கன், ஓமாந்தூர் ராமசாமி, பசும்பொன் முத்துராமலிங்கம், அப்துல்கலாம் போல் தன்னலமற்ற தலைவர்களாக இருக்க வேண்டும் என்றும் நடிகர் விவேக் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Vivek said that who ever can come to politics. But they should be 100 % dedicated he said.
Please Wait while comments are loading...