ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு தீபா, தீபக்தான்... சசி கும்பல் தடுப்பது சரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதான் அண்ணன் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோரை போலீசார் போயஸ்கார்டனுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு தான்தான் என்று கூறி வந்தார் தீபா. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு போயஸ் தோட்டத்தில் உள்ள வேதாநிலையம் சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இளவரசியின் மகன் விவேக் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

who is the Jayalithaa's legal heir?

கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 75 நாட்கள் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபாவிற்கு ஒவ்வொரு முறையும் அனுமதி மறுக்கப்பட்டது. சசிகலாவின் உறவினர்களால் தடுக்கப்பட்டார் தீபா. பெரும் போராட்டத்திற்குப் பிறகே அத்தைக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்கு செய்தார் தீபக். அப்போது ரத்த சொந்தத்தை வைத்து இறுதி அஞ்சலி செய்ததற்கு சசிகலாவை பாராட்டினர். ஆனால் போயஸ் கார்டனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் சசிகலா.

சசிகலா சிறைக்கு செல்லவே, கட்சி 3 அணிகளாக சிதறியுள்ளது. இந்த நிலையில்தான் உண்மையான வாரிசுதான்தான் என்று கூறிய தீபா, காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சொன்னதோடு மட்டுமல்லாது இன்று காலையிலேயே போயஸ்தோட்டத்திற்குள் வந்தார் தீபா, கூடவே அவரது சகோதரர் தீபக், மற்றும் தீபாவின் கணவர் மாதவனும் வரவே பரபரப்பு பற்றிக்கொண்டது.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு செல்ல ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர்கள் தடுப்பதாக தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் கூறியுள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யார் யாரோ போயஸ் தோட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவது நியாயமா என்று தீபாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jayalalithaa and her mother Sandhya purchased the Poes Garden property in 1967 for Rs 1.32 lakh. Jaya's nephew and niece could, if they want to, stake claim to a share of the Poes Garden property , originally acquired by their grandmother, legal experts say .
Please Wait while comments are loading...