போயஸுக்கு சொந்தம் கொண்டாடும் தீபாம்மா.. அத்தையோட மருத்துவ செலவுகளை ஏற்காதது ஏனம்மா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தான்தான் என்றும் அவரது போயஸ் தோட்டத்தையும், திராட்சை தோட்டத்தையும் மீட்டெடுப்பேன் சூளுரைக்கும் தீபா, ஜெயலலிதாவின் மருத்துவ பில்லை கண்டும் காணாமல் விட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நல கோளாறு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நடந்ததை இந்த நாடே அறியும். அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட நிலையில் அதிமுக கண்டிப்பாக மீட்டெடுப்பேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சூளுரைத்தார்.

அரசியல் அமைப்பு

அரசியல் அமைப்பு

ஜெயலலிதாவை போலவே உருவத்தில் தீபாவும் உள்ளதால் அவரது அரசியல் வாரிசு தீபாதான் என்று சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத தொண்டர்கள் தீபாவின் வீட்டு வாசலில் திரண்டனர். இவை அனைத்தையும் கவனித்து வந்த தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-இல் எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.

நிர்வாகிகள் நியமனத்தில் கோளாறு

நிர்வாகிகள் நியமனத்தில் கோளாறு

இதைத் தொடர்ந்து தீபாவின் கார் டிரைவராக உள்ள ராஜாவுக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை அளித்தார். மேலும் ராஜாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதால் கட்சியின் உண்மையான தொண்டர்களை முகம் சுளிக்க வைத்தது. தீபாவின் கணவரும் கூட முகம் சுளித்தார். தீபாவின் வீட்டு வாசலில் அடிதடி தகராறுகள் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தீபாவின் கார் டிரைவராக உள்ள ராஜாவுக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை அளித்தார். மேலும் ராஜாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதால் கட்சியின் உண்மையான தொண்டர்களை முகம் சுளிக்க வைத்தது. தீபாவின் கணவரும் கூட முகம் சுளித்தார். தீபாவின் வீட்டு வாசலில் அடிதடி தகராறுகள் ஏற்பட்டது.

தீபா பேரவை கூண்டோடு கலைப்பு

தீபா பேரவை கூண்டோடு கலைப்பு

அரசியலுக்கு வருவேன் என்று தீபா சொன்னாலும் அதற்கான பணிகளை தொடங்கவில்லை என்றும் தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் இடையே தகராறு நடந்ததாலும் தீபாவால் கட்சிபணிகளில் கவனம் செலுத்தாததாலும் அவரது அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கூண்டோடு கலைக்கப்பட்டது.

தினகரன் மீது விமர்சனம்

தினகரன் மீது விமர்சனம்

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தினகரன் மீது கடுமையாக விமர்சனங்களை தீபா அள்ளி வீசினார். இதனால் விசாரணை என்ற பெயரில் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தீபாவிடம் போனில் விளக்கம் கேட்டார். அதற்கு தீபா, தினகரன் யார் , அவர் முதல்வரா, அமைச்சரா, கலெக்டரா, அரசு அதிகாரியா என்று கேள்வி எழுப்பி அவரையே திக்குமுக்காட வைத்தார்.

போயஸ் கார்டனுக்கு...

போயஸ் கார்டனுக்கு...

கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனுக்கு திடீரென தீபா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு தீபாவை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தன்னை தன் தம்பி தீபக்தான் வரழைத்து திட்டமிட்டு தாக்கியுள்ளார் என்றும் அத்தையை சசிகலாவுடன் சேர்ந்து தீபக் கொலை செய்து விட்டான் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் ஒரு தலைவரா

இவர் ஒரு தலைவரா

இதையெல்லாம் விட அரசியலில் இதுவரை உள்ள தலைவர்கள் தங்களது விரோதிகளையும் மரியாதையாகவும், விமர்சனம் எழும்படியான வார்த்தைகளாலும் இதுவரை பேசியதில்லை. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் கூட இவ்வாறு தரக்குறைவாக பேசிக் கொண்டதில்லை. ஆனால் தீபாவோ தரை லோக்கலாக இறங்கி சசிகலாவை பொறம்போக்கு என்றும் தன் தம்பி தீபக்கை எச்சக்கல என்றும் திட்டியதை பார்த்து அங்கிருந்தோரே காறி துப்பாத குறையாக பார்த்தனர்.

சைட் சண்டை வேற

சைட் சண்டை வேற

இதில் தீபாவின் கணவர் மாதவனை அவரது தாயை இழிவுபடுத்தி டிரைவர் ராஜா நடு ரோட்டில் வைத்து திட்டி அது தனிச் சண்டையாக அரங்கேறி தீபா குடும்பத் தகராறுகளை சந்தி சிரிக்க வைத்தது.

சொத்து வேண்டும்

சொத்து வேண்டும்

இந்த நிலையில், அத்தையின் பேனா மட்டும் எனக்கு போதும் என்றும் கூறிய தீபா இன்று போயஸ் கார்டன் வேண்டும் என்கிறார். அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்பேன் என்று ஒரு காலத்தில் கூறிய தீபா, தற்போது திராட்சை தோட்டத்தையும் மீட்பேன் என்கிறார்.

பில் யார் கட்டியது

பில் யார் கட்டியது

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஏற்பட்ட செலவான ரூ. 6.5 கோடியை சசிகலா தரப்பினர் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செலுத்தினர். ஜெயலலிதாவின் சொத்துக்கு சொந்தம் கொண்டாடும் தீபா, அத்தையின் மெடிக்கல் பில்லை செலுத்தியிருந்தால் சொத்தை சொந்தம் கொண்டாடுவதில் நியாயம் இருக்கிறது.

அபராதம் யார் செலுத்துவது

அபராதம் யார் செலுத்துவது

அதேபோல் சொத்துக் குவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதத்தை தீபா கட்டுவாரா என்று தெரியவில்லை. அத்தையின் ரத்த வாரிசு என்று தன்னை கூறிக் கொள்ளும் தீபா, அத்தைக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையையும், அபராதத்தையும் ஏற்பாரா? அத்தையின் வீடு நினைவில்லமாகக் கூடாது என்று தீபா நினைத்தால், அதை தமிழ்நாட்டு மக்களுக்கு எழுதி வையுங்கள் என்று கூறலாமே. கட்சியை நடத்த பணம் வேண்டும் என்பதற்காக அத்தையின் சொத்துக்கு ஆசைப்படுகிறாரா தீபா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஜெயலலிதாவின் எந்தவித சுமையையும் ஏற்காமல் அவர் கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்துகள் மட்டும் வேண்டும் என்று தீபா சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்?

எத்தனை பேர் உழைப்பு

எத்தனை பேர் உழைப்பு

அரசியலிலும் உழைக்க மாட்டேன், ஆனால் யாரோ உருவாக்கிய அதிமுக மட்டும் வேண்டும். ஜெயலலிதாவின் சுமையை ஏற்கமாட்டேன், ஆனால் அவர் சேர்த்து வைத்த சொத்து மட்டும் வேண்டும். அதிமுக என்பது கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு. அதை ரத்த சொந்தம் என்ற ஒரே தகுதியை கொண்டுள்ள தீபா உரிமை கொண்டாடுவது அடுக்குமா? நோகாமல் நோன்பு கும்பிட பார்த்தா எப்படி தீபா?. அரசியலில் நிலைத்திருக்க தினந்தோறும் அட்டென்டன்ஸ் போடனும். இப்படி ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் எதையாவது கிளப்புவது, எதற்காகவது உரிமை கொண்டாடுவது அல்ல.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa wants to possess Jayalalitha's assets. But the former has not even paid the medical bill of Jayalalitha.
Please Wait while comments are loading...