தமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான் கேள்வி

Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  சென்னை : தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

  சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் இன்று மேற்கொண்டன.

  Why Defence Ministry doing Expo in Chennai questions Seeman

  சென்னை விமான நிலையம் அருகே நடைபெற்ற கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.

  இதில் பேசிய சீமான், தமிழர்களை கடலில் மூழ்கி சாகும்போதும், குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த போதும் காப்பாற்ற வராத ராணுவத்திற்கு எதற்காக சென்னையில் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

  மேலும், நீட் விவகாரம், காவிரி பிரச்னை, நியூட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்பு என தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருவதால், இந்தக் கண்காட்சியை நடத்தி மக்களை மிரட்டப்பார்க்கிறார்கள்.

  மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று சொல்லும் முதல்வர், துணைமுதல்வர் இருவரும் கடந்த ஓர் ஆண்டில் தமிழர்களுக்காக சாதித்தது என்ன என்று சொல்ல முடியுமா என்றும் சீமான் கேள்வியெழுப்பி உள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Why Defence Ministry doing Expo in Chennai questions Seeman. Naam Tamilar Katchi Chief Coordinator Seeman says that, Central Government is doing nothing good for Tamilnadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற