தினகரன் பொதுக் கூட்டத்திற்கு மன்னார்குடியில் தடை ஏன்.. போலீஸ் போட்ட தடைக்கு பின்னணி இதுதானாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: மன்னார்குடியில் இன்று நடைபெறவிருந்த தினகரன் ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்துள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவு கோஷ்டியினர் மன்னார்குடியில் இன்று மாலை பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் முறைப்படை போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

அதன்பின்னர், பொதுக் கூட்டம் நடத்துவதற்கான இடத்தில் மேடை அமைத்துள்ளனர். ஆனால் திடீரென போலீசார் இந்தக் கூட்டத்திற்கு கொடுத்த அனுமதியை போலீசார் ரத்து செய்துள்ளனர்.

தினகரன் கட்டளை

தினகரன் கட்டளை

இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைதாகி பின் வெளியே வந்த தினகரன் ஸ்டைலே மாறிவிட்டது. அதுவரை கட்சியில் இருந்து விலகி இருக்கிறேன் என்று கூறி வந்தவர் தன்னுடைய கண்ட்ரோலில் கட்சியைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார்.

அதிகாரம் இல்லை

அதிகாரம் இல்லை

மேலும், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஜெயக்குமாருக்கோ, அமைச்சர்களுக்கோ இல்லை. பொதுச்செயலாளர் சசிகலாவிடமே உள்ளது என்றும் அழுத்தம் திருத்தமாக பேசினார்.

தயாராக இல்லை

தயாராக இல்லை

தினகரன் இப்படி பேசி வந்த நிலையில், இதற்கெல்லாம் அடிபணியத் தேவையில்லை என்று எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான குழு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில்தான் முதல்வரின் புகைப்படத்தை அமைச்சர்கள் அறையில் திறந்து வைக்கப்பட்டது.

பொதுக்கூட்ட ஏற்பாடு

பொதுக்கூட்ட ஏற்பாடு

இது ஒரு பக்கம் நடந்து வந்தாலும், தினகரன் தன் பக்கம் இழுக்க வேண்டிய எம்எல்ஏக்களை பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையே தான் இன்று தினகரன் ஆதரவு பொதுக் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற இருந்தது.

ரத்துக்கு காரணம்

ரத்துக்கு காரணம்

இதனை கேள்விப்பட்ட பழனிசாமி டீம், பொதுக் கூட்டத்தை தடுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் களம் இறங்கியதாம். இதனைத் தொடர்ந்து என்று முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு, போலீசார் அவசர அவசரமாக கூட்டத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்துள்ளனர்.

பதிலுக்கு பதில்

பதிலுக்கு பதில்

இதனால் கடுப்பான தினகரன் அணி, பழனிசாமியின் கை ஓங்கிவிட்டதாக யாரும் கருத வேண்டாம். இதற்கான உரிய பதிலை தினகரன் தருவார் என்று கூறியுள்ளனர். மேலும், மன்னார்குடியில் தினகரனுக்கு ஆதரவு அதிகம் இருக்கும் என்பதால்தான் இப்படி பழனிசாமி திட்டமிட்டு செய்துள்ளதாகவும் ஆவேசமாக அவர்கள் கூறியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Why Public meeting, which will be held by Dinakaran supporters in Mannarkudi was cancelled by police?
Please Wait while comments are loading...