For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்.. அதிமுக இணைப்பு பேச்சு வார்த்தை நடக்குமா?

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடக்கும் முழு அடைப்புப் போரட்டத்தின் போது அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையை ஒபிஎஸ், எடப்பாடி கோஷ்டியினர் நடத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகளின் போர்ரடட்த்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக இணைப்புப் பேச்சுவார்த்தை இன்று நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஒருவார காலமாக எடப்பாடி கோஷ்டியினரும் ஒபிஎஸ் கோஷ்டியினரும் இணவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கும். அதன்மூலம்,அதிமுக ஒன்றிணையும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதற்காக எடப்பாடி கோஷ்டி, வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட பேச்சு வார்த்தைக் குழுவை த்தது. அதேபோலொபிஎஸ் கோஷ்டியினரும்குழு அமைத்தனர்.

 ஓபிஎஸ் கோஷ்டியினரின் இரண்டு கோரிக்கைகள்

ஓபிஎஸ் கோஷ்டியினரின் இரண்டு கோரிக்கைகள்

ஆனால் நேற்று ஒபிஎஸ் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, சசிகலா கட்சியிலிருந்து நீக்கம், ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை என்ற இரண்டு கோரிக்கைகளை எடப்பாடி கோஷ்டியினர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

 இழுபறி பேச்சுவார்த்தை

இழுபறி பேச்சுவார்த்தை

ஆனால் நேற்று இரண்டு கோஷ்டிகளும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள். அதன்மூலம் எதாவது ஒரு முடிவை எட்டுவார்கள் என்று அதிமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் பேச்சுவார்த்தை இழுபறியாகவே உள்ளது.

 தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம்

தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம்

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும்திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இதனால் நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

 கருத்து சொல்லாத ஒபிஎஸ்

கருத்து சொல்லாத ஒபிஎஸ்

ஆனால், கடந்த 41 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த போதும், ஒபிஎஸ் அதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவரது கோஷ்டியில் உள்ள மூத்த தலைவர்களும் விவசாயிகளின் போராட்டம் குறித்து எதுவும் கூறவில்லை.

 இன்று பேச்சு வார்த்தை நடக்குமா?

இன்று பேச்சு வார்த்தை நடக்குமா?

இந்நிலையில்,இன்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது, ஒபிஎஸ் கோஷ்டியினர் அமைதி காப்பார்களா அல்லது அதிமுக இணைப்புப் பேச்சு வார்த்தை நடத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இணைப்புப் பேச்சுவார்த்தை நடத்தினால் அது முழு அடைப்புப் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள்கூறுகின்றனர்.

English summary
Whether OPS team and Edappadi team will have a merger talk today? because, in Tamilnadu bandh is going on and people co operating for the bandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X