வெற்றிவேல், தமிழ்செல்வனுடன் பேசி எங்களுடன் சேர வைப்போம்: கே.சி. வீரமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிவேல், தமிழ்செல்வன் ஆகியோர் ஏதோ பேசி வருகிறார்கள். அவர்களுடன் பேசி அவர்களையும் எங்களுடன் சேர்ந்து செயல்பட வைப்போம் என்று அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் சசி அணி இரண்டாக உடைந்துள்ளது. டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் குடும்பத்தாரை ஒதுக்குவது என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கே.சி. வீரமணி கூறுகையில்,

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

ஓ. பன்னீர்செல்வம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். பேச்சுவார்த்தையின்போது தான் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தெரிய வரும்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம் ஒரு ஜென்டில்மேன். அவர் கட்சியை நல்ல முறையில் வழிநடத்த உறுதியாக உள்ளார். பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும்.

முடியாது

முடியாது

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, சசிகலா தலையீடு கட்சியில் இருக்கக் கூடாது ஆகிய 2 முக்கிய நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் முன்வைப்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.

தினகரன்

தினகரன்

தினகரன் குடும்பத்தார் தலையீடு இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். வெற்றிவேல், தமிழ்செல்வன் ஆகியோர் ஏதோ பேசி வருகிறார்கள். அவர்களுடன் பேசி அவர்களையும் எங்களுடன் சேர்ந்து செயல்பட வைப்போம் என்றார் வீரமணி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister KC Veeramani said that they will talk to Vetrivel and Tamilselvan and get them to their team.
Please Wait while comments are loading...