பதவி வரும்போது பணிவு வர வேண்டும்.. தினகரனுக்கு இது தெரியாதா என்ன!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி-வீடியோ

  சென்னை: பதவி வரும் போது பணிவு வரவேண்டும்... துணிவும் வரவேண்டும் என்று பாடினார் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இது அவரது பெயரை சொல்லி ஓட்டு கேட்டு ஜெயித்த தினகரனுக்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  உடல்மொழி, பேட்டி கொடுக்கும் சொல்லும் வார்த்தைகள் சினிமாவுக்கு மட்டுமின்றி அரசியலுக்கும் தேவை. அது தெரியாமல் போனதால்தான் விஜயகாந்த் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார்.

  டிடிவி தினகரன் இதை நன்கு அறிந்தவர். உறவினர்கள் வீடுகளிலும் தனது பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்த போது கூட சிரித்த முகத்தோடு நக்கலாக அசராமல் பேட்டி கொடுத்தார். அது அனைவருக்கும் பிடித்தது.

  புன்னகை மாறா பதில்

  புன்னகை மாறா பதில்

  டிடிவி தினகரன் சிரித்த முகத்தோடு, பொறுமையாக மரியாதையாக பேசுவது பிடிச்சிருக்கு என்று பலரும் கூறினர். புன்னகை மன்னர் என்று பட்டப்பெயரே சூட்டினர். அவரை சுற்றியிருந்தவர்கள் மரியாதை குறைவாக பேசும் போது கூட இவர் நிதானம் காத்தார்.

  ஆர்.கே. நகர் எம்எல்ஏ

  ஆர்.கே. நகர் எம்எல்ஏ

  கேள்விகள் எவ்வளவு வீரியமாக இருந்தாலும் அதை தவிடுபொடியாக்கி விடுவார் தினகரன். அதே போல சமீபத்தில் தன்னை பேட்டி கண்ட ஒரு செய்தியாளரை கதறடித்தார். இது வாட்ஸ் அப்பில் வைரலானது. எல்லாம் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகும் வரைக்கும்தான்.

  வாழும் எம்ஜிஆர்

  வாழும் எம்ஜிஆர்

  தினகரன் வெற்றி பெற்ற உடனேயே பேட்டி கொடுத்த தங்க தமிழ் செல்வன், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய ஒரே தலைவர் டிடிவி தினகரன் என்று கூறினார். இதற்கு ஒருபடி மேலே போய் அவரது ஆதரவாளர் ஒருவர் வாழும் எம்ஜிஆர் அண்ணன் டிடிவி தினகரன் என்று கூவினார்.

  தெனாவெட்டாக பதில்கள்

  தெனாவெட்டாக பதில்கள்

  செய்தியாளர்கள் சாதாரணமாக கேட்கும் கேள்விகளுக்குக் கூட தெனாவெட்டான பதில்களே தங்கத்தமிழ்செல்வனிடம் இருந்து வருகிறது. அதே போல புகழேந்தியும் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிக்கிறார். இதை தினகரன் ஊக்கப்படுத்துகிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் அவரது பேட்டிகளும் இப்போது அப்படித்தான் இருக்கிறது.

  இடம் பொருள் ஏவல்

  இடம் பொருள் ஏவல்

  அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத் தலையர், காமெடியன் என சரமாரியாக கிண்டலடித்தார் டிடிவி தினகரன்.
  எடப்பாடி பழனிச்சாமியை இடிச்சப்புளி பழனிச்சாமி என கிண்டலடித்தார் டிடிவி தினகரன். கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கட்டும் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு வழங்கவேண்டிய குறைந்தபட்ச மரியாதையை கூடவா கொடுக்க தெரியாது தினகரனுக்கு. பதவி வரும்போது பணிவு வரவேண்டும்... இதை உணர்ந்தால் நல்லது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran is known for his warmth and cool behaviour. But he looks changed a lot after wiining the R K Nagar by election it seems.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற