For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. முதலாண்டு நினைவு.. டிச. 5ம் தேதிக்குள் எதையாவது கண்டுபிடிப்பார்களா.. ?

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் விசாரணையே படு தாமதமாகியுள்ளதால் ஜெயலலிதா மறைந்த முதலாமாண்டு நினைவு நாளுக்குள் அவரது மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழ்க்கப்படாது என்ற நிலையே காணப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்களை வருமான வரி துறையினர் "எலிபன்ட் ஸ்கெட்ச்" என்று பெயரிட்டு பொறி வைத்து பிடித்தது போல ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சுகளையும் "இட்லி ஸ்கெட்ச் அல்லது அப்போலோ ஸ்ஸ்ட்ச் அல்லது ஸ்கெட்ச் 22" என்று எதாவது ஒரு பெயரிட்டு பிடிக்க முயற்சித்திருக்கலாம்.

சசிகலா சொத்துக்கள் தொடர்பாக ஒரு பூங்குன்றன் போல இந்த விசாரணைக்கும் ஏதாவது ஒரு பொறியை வைத்து துரிதமாக விசாரணை நடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போதைய விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி அந்த பெருச்சாளிகளிகளின் முகங்களை வெளியே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அரசு தீர்த்திருக்கலாமே

தமிழக அரசு தீர்த்திருக்கலாமே

முன்னாள் முதல்வர் ஜெயலிலதா நினைவு நாள் அன்று அதிமுக சார்பில் மெளன ஊர்வலம் நடப்பதாக அறிவித்துள்ள தமிழக அரசு அதற்கு தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இப்படியெல்லாம் அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த நினைக்கும் அரசு அவரின் மரணத்தில் உள்ள குழப்பத்தை அவரது நினைவு நாளுக்குள் தீர்த்து மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அப்பல்லோ மர்மம்

அப்பல்லோ மர்மம்

ஜெயலிலிதா செப்டம்பர் 22 அன்று அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது இருந்த அவரின் உடல்நிலை, அப்போல்லோ நிர்வாகமும் சசிகலா குடும்பத்தினரும் கூடவே கட்சியினரும் பகிர்ந்த தவறான தகவல்கள், அவரை இறுதிவரை எந்த தலைவர்களையும் பார்க்க அனுமதிக்காத விசித்திரம், அவரின் சிகிச்சை புகைப்படங்கள் ஓன்று கூட வெளிவராத மர்மம், காவேரி பிரச்னை பற்றி மருத்துமனையில் அவர் ஆலோசனை நடத்தி பேசியதாக கூறப்பட்ட அதிசய தகவல், அம்மா இட்லி சாப்பிட்டதாக கூறி பின் டிசம்பர் 5ல் அவர் திடீரென கார்டியாக் "அரெஸ்ட்"இல் இறந்ததாக கூறப்பட்ட மர்மம், படுக்கையில் இருந்த போது அவர் இட்டதாக சொல்லப்பட்ட கைரேகை என பல கேள்விக்குறிகள் அடுக்கடுக்காக மக்கள் மனதில் இன்னும் நீங்காமல் இருக்கிறது .

தொடரும் சந்தேகங்கள், கேள்விகள்

தொடரும் சந்தேகங்கள், கேள்விகள்

இவை எல்லாம் ஏன் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன என மக்கள் இந்த செப்டம்பர் 22 அன்று எழுப்பிய கேள்விகளின் எதிரொலியாகவே ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்க்கப்பட்டது. ஜனவரி -பிப்ரவரி மாதத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஓரிடத்தில் ஆட்டு மந்தைகளாக அடைக்கப்பட்டு நடந்த கூவத்தூர் ரிசார்ட் கூத்து நேரத்திலேயே விசாரணையை முடுக்கி விடப்பட்டிருக்கலாம்.

அதிமுக தொண்டர்களுக்கு மரியாதை

அதிமுக தொண்டர்களுக்கு மரியாதை

விசாரணையை முன்பே முடுக்கி விட்டிருந்தால், ஜெயலலிதாவின் நினைவு நாளுக்கு முன்பாகவே அவரது மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகள் அவிழ்ந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியும், ஜெயலலிதா பெயரைச் சொல்லி நடந்து வரும் இந்த அரசும் சரியான மரியாதையாக இருந்திருக்கும். அனால் யதார்த்தத்தில் இங்கு என்னவோ எல்லாமே தலைகீழாகத்தான் நடந்து வருகிறது. ரோடு போட்டிருக்கப்பட வேண்டிய நேரத்தில் இப்போதுதான் கோடே போட ஆரம்பித்துள்ளனர். அந்த "இரும்பு பெண்மணி" என்னும் இமயம் சரிய காரணமான உண்மையான காரணிகளை கண்டுபிடித்து டிசம்பர் 5ம் தேதிக்குள் அடையாளம் காட்டுவார்களா.. வழக்கம் போல பொறுத்திருந்து பார்ப்போம்.

- Inkpena சஹாயா

English summary
ADMK cadres and the people of Tamil Nadu are wondered when will the mysterious knots be removed in Jaya's death case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X