• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கள்ளக்காதல்... அத்தான் மேல் ஆசை - சொத்துக்காக அக்காவை கழுத்தறுத்து கொன்ற கொடூர தங்கை

By Mayura Akhilan
|
  திருப்பூரில் சொத்துக்காக அக்காவை கழுத்தறுத்து கொன்ற கொடூர தங்கை- வீடியோ

  திருப்பூர்: அத்தான் மேல் கொண்ட ஆசையால் சொத்துக்காகவும், கள்ளத் தொடர்பை மறைக்கவும் சொந்த அக்காவையே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண்.

  இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும், இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். தகாத உறவுமுறையால் நிகழ்ந்த இந்த கொலை 4 குழந்தைகளை அனாதைகளாக்கியுள்ளது.

  டிவி சீரியல்களிலும் சினிமாக்களிலும்தான் கூட இருந்தே குழி பறிக்கும் கதாபாத்திரங்களை பார்த்திருப்போம். ஆனால் ஆதரவற்ற நிலையில் வந்த சித்தி மகளுக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணிற்கே எமனாக அமைந்து விட்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருப்பூரில் பெண் கொலை

  திருப்பூரில் பெண் கொலை

  திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் காமாட்சியம்மன் நகரை சேர்ந்தவர் பூபாலன், தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி பூபாலன் வேலைக்கு சென்றிருந்த போது வீட்டில் கைகுழந்தையுடன் தனியாக இருந்த அவரது மனைவி நதியா கழுத்தறுத்து கொல்லப்பட்டார்.

  நகை திருட்டு

  நகை திருட்டு

  திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்ட நதியா அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலி திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து நகைக்காக கொலை நடத்திருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்தது.

  நதியா கொலையில் ரேகா

  நதியா கொலையில் ரேகா

  கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் விசாரித்து கொண்டிருக்கும் போது நதியாவின் சித்தி மகளான ரேகா செல்போன் மூலம் யாருக்கோ தகவல் தெரிவித்தார். அது போலீசிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த போலீசார், ரேகாவை தங்களின் பாணியில் விசாரித்தனர்.

  கள்ளத் தொடர்பு

  கள்ளத் தொடர்பு

  போலீஸ் விசாரணையில் நதியா கொலையின் மர்ம முடிச்சுகள் வெளியே வந்தன. 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவர் கஜேந்திரனுக்கு தெரியாமல் நாகராஜ் என்பவருடன் ரேகா தவறான தொடர்பு வைத்திருந்தார். இதனை ஸ்பை கேமரா வைத்து கண்டுபிடித்த கஜேந்திரன், மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். ஆனால் அவர் வைத்த கேமரா மட்டும் அப்படியே இருந்தது. இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

  அடைக்கலம் கொடுத்த அக்கா

  அடைக்கலம் கொடுத்த அக்கா

  மனைவி நதியா சொன்னதால் அவரது தங்கை ரேகாவுக்கு தேவையான பண உதவி செய்ய சென்ற பூபாலனை, மயக்கிய ரேகா அவரை தனது காதல் வலையில் வீழ்த்தினார். புதிய வீடு, கை நிறைய பணம், என்று வசதியாக வலம் வந்த பூபாலனை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தார்.

  காட்டிக்கொடுத்த பேனா

  காட்டிக்கொடுத்த பேனா

  இந்த நிலையில் ரேகாவின் வீட்டுக்கு வந்த நதியாவின் 4 வயது மகள் அங்குள்ள படுக்கை அறையில் இருந்த பேனா கேமரா ஒன்றை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். அதை பார்த்த நதியா அதில் என்ன இருக்கிறது பார்க்கவே, அதில் தனது தங்கை ரேகா, வேறு ஒரு இளைஞருடனும், தனது கணவர் பூபாலனுடனும் படுக்கை அறையில் அந்தரங்கமாக காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தார்.

  கண்டித்த நதியா

  கண்டித்த நதியா

  எனக்கே துரோகம் செய்கிறாயா என்று ரேகாவிடம் தகராறு செய்த நதியா, தனது கணவரையும் கண்டித்துள்ளார். இதனால் பதறிப்போன ரேகா, அந்த பேனாவை கேட்டு கெஞ்சி உள்ளார். ஆனால் நதியா கொடுக்க மறுத்து விடவே, தனது ரகசியம் தெரிந்த நதியாவை தனது கள்ளக்காதலனை வைத்தே கொல்ல திட்டம் போட்டார். இதிலும் ரேகாவின் நயவஞ்சம் இருந்துள்ளது.

  அத்தானை மணமுடிக்க திட்டம்

  அத்தானை மணமுடிக்க திட்டம்

  நதியாவை கொன்று விட்டு கள்ளக்காதலன் நாகராஜ் ஜெயிலுக்கு சென்றால், கணவரிடம் விவாகரத்து பெற்று, நதியா இறந்ததை காரணம் காட்டி பூபாலனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழலாம் என்பது ரேகாவின் பலே திட்டம். மார்ச் 14ஆம் தேதியன்று இதற்காக நாள் குறித்தார் ரேகா.

  கொலை

  கொலை

  நதியா உடன் 2 வயது ஆண் குழந்தையும் 4 வயது மகளும் இருந்துள்ளனர். நாகராஜை 4 வயது சிறுமி அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டுக்கு தூக்கி வந்த ரேகா, வெளியே பதுங்கி இருந்த நாகராஜுக்கு சைகை காட்டினார். உடனடியாக அங்கே சென்ற நாகராஜ், கத்தியால் நதியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நகையையும் திருடிக்கொண்டு தப்பினார்.

  2 பேர் கைது

  2 பேர் கைது

  நாகராஜ், ரேகா ஆகியோருக்கு இடையேயான செல்போன் பேச்சு விவரங்களை அடிப்படையாக வைத்து விசாரித்த காவல்துறையினர் இதனை கண்டு பிடித்தனர். நாகராஜிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் ,5 பவுன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகராஜையும், ரேகாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காகவும், தகாத உறவினாலும் அக்காவின் பணம், சொத்துக்கு ஆசைப்பட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கொலையால், 4 குழந்தைகளும் தாயில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  English summary
  Tirupur police arrest 2 person in connection with woman murder case. A woman in Tirupur killed her sister by plotting with her lover so that she can marry the sister’s husband.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X