மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கத்திக்குத்து... நீக்கப்பட்ட பேராசிரியர் வெறிச்செயல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஜெனிஃபாவை முன்னாள் விரிவுரையாளர் ஜோதி முருகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவர் ஜெனிபாவை கல்லூரி வளாகத்திலேயே வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ஜோதி முருகன் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த பேராசிரியை ஜெனிபாவிற்கு நாகமலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 A woman lecturer at Madurai hacked inside the campus and hospitalised

ஜெனிஃபாவை முன்னாள் விரிவுரையாளர் ஜோதி முருகன் பலமுறை கத்தியால் குத்தியதால் அந்த அறை முழுவதும் ரத்தக்கரையாக உள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஜெனிபா மூலம் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஆத்திரத்தில் ஜோதி முருகன் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்து கத்தி குத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ஜோதி முருகனை பிடித்து மாணவர்கள் போலீசாரிடம் ஒப்படைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A woman lecturer attacked at the classrom of Madurai Kamarajar university by the collegaue who lost job, attacked lecturer hospitalised.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற