பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய டிஎஸ்பி.. மக்கள் கொந்தளிப்பு...டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை!
டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடிய பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய காட்டு மிராண்டி போலீஸ் டிஎஸ்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
திருப்பூர் : டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய திருப்பூர் டிஎஸ்பி பாண்டியராஜனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
திருப்பூர் அருகேயுள்ள சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் இன்று காலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைய மறுத்ததால் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்க துவங்கினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கன்னத்தில் டிஎஸ்பி பாண்டியராஜன் பலமாக தாக்கினர். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்து போனார். மேலும் வயதான பெண்கள் மற்றும் முதியவர்கள் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது.

காட்டுமிராண்டி தாக்குதல்
இப்போராட்டம் மற்றும் காவல்துறையினரின் அத்துமீறலை படம்பிடித்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதும் காவல்துறையினர் கடுமையாக தாக்கினர்.
போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் ஒரு சில பெண்கள் மற்றும் சிலர் காயமடைந்தனர். இதில் சிலருக்கு மண்டை உடைந்தது.

போர்களமான சாமளாபுரம்
போலீசாரின் தடியடியை கண்டித்து மக்கள் பதிலுக்கு அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. மதுக்கடையை மூடக்கோரி 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி மக்களை காவல்துறையினர் அடித்து விரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஎஸ்பிக்கு எதிராக முழக்கம்
போலீஸ் அராஜகம் ஒழிக... என்று காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். ரேசன் கடை கேட்டால் அதனை திறக்காமல், மதுக்கடையை திறக்க இவ்வளவு பாடுபடுவது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

டிஎஸ்பி பாண்டியராஜன்
பெண்ணை கன்னத்தில் அறைந்த அதிகாரி திருப்பூர் டிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டாஸ்மாக் எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் விரோதத் தன்மையில் ஊரிப்போய் இருக்கிறது தமிழக அரசு என இந்திய கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது.
பணிநீக்கம் செய்க
பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அதிமுக ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு போலீஸ் தாக்குதல் சாட்சியாகும் என பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications