For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவக்கோட்டை பள்ளியில் கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி! வீடுகளில் கழிவறை கட்ட வலியுறுத்தல்

உலக கழிவறை தினத்தையொட்டி தேவக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு சுகாதரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு கழிவறை கோப்பை மூலமாக கழிவறை முக்கியத்துவம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆசிரியர் ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.அப்போது, உலகில் கழிவறை இல்லாத டாப் -10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்கிற தகவலும், கழிப்பறை பயன்படுத்தாத நாடுகளில் முதல் 10-வது இடத்தில் முதலாவதாக இந்தியா உள்ளது என்கிற தகவலும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

World toilet day observed in devakkottai

இதில், மாணவர்கள் மத்தியில் கழிவறை கோப்பை காண்பிக்கப்பட்டு நேரடியாக கழிவறையின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.அனைத்து மக்களும் பல ஆயிரம் கொடுத்து செல் போன் வாங்குகின்றனர்.

ஆனால், துய்மையாக இருக்க வேண்டிய கழிவறை பயன்பாடு செல்போன் பயன்பாடு அளவில் பத்து சதவிகிதம் கூட இல்லை என்ற கவலை முன்வைக்கப்பட்டது. கழிவறை இருந்தும் பயன்படுத்தாத இடத்தில் உலக அளவில் முதலிடத்தில் இந்தியா உள்ளது கவலை தரக்கூடிய செய்தியாகும்.

World toilet day observed in devakkottai

இதனை மாற்றி அனைவருக்கும் கழிவறை அமைத்து கொடுத்து தனி நபர் சுத்தம்,வீடு சுத்தம் ,தெரு சுத்தம்,ஊர் சுத்தம்,நாடு சுத்தம் என துய்மை இந்தியாவை உருவாக்க சபதமேற்போம் என மாணவர்களிடம் சுத்தம் தொடர்பாக விரிவாக எடுத்து சொல்லப்பட்டது. தற்போதும், சிலரது வீடுகளில் இன்னும் கழிவறை கட்டப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.

அவர்களிடமும் பெற்றோர்களிடம் சொல்லி விரைவில் கழிவறை கட்ட ஆவண செய்து சுகாதாரத்தை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. மாணவிகள் சின்னம்மாள்,பரமேஸ்வரி,சக்தி,காயத்ரி,ராஜேஸ்வரி,ஜெனிபர், மாணவர் செந்தில்,ஐயப்பன்,நந்தகுமார்,ஹரிஹரன்,ஈஸ்வரன்,கிஷோர்குமார்,பரத் ஆகியோர் துய்மை இந்தியா திட்டம் குறித்தும்,கழிவறைகள் தேவை குறித்தும் பேசினார்கள்.

World toilet day observed in devakkottai

இல்லங்கள் தோறும் கழிவறை சுகாதாரத்தின் அடிப்படை, நோய்கள் இல்லாதசுகாதாரத்தை காத்திட கழிவறை அவசியம் என்கிற தலைப்பிலான உறுதிமொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

English summary
World toilet day observed in devakkottai and explanation given to the participated school student about clean environment here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X