• search

உடலையும் மனதையும் வலுவாக்கும் யோகா - சென்னையில் கின்னஸ் உலக சாதனை

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  காஞ்சிபுரம்: யுவா மந்திரம் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்நாடு சுற்றுலா துறை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இணைந்து மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 26 ம் தேதி மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் யோகாவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

  யோகா உடம்பையும் மனதையும் சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும்.

  குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும். மேலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்

  ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

  யோகாசன பயிற்சி

  யோகாசன பயிற்சி

  ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச் சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள் நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல் களிலும் ஓவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

  யோகாவில் சிறக்க சிவன் தரிசனம்

  யோகாவில் சிறக்க சிவன் தரிசனம்

  தமிழ் சித்தர்களின் முதற்கடவுளாக விளங்குபவர் முருக பெருமான். செவ்வாய்க்கு அதிபதியான அவரை பழனி மலையில் சென்று தரிசிப்பது யோககலையில் சிறந்த நிலை அடைய உதவும். 4.சிதம்பரம் நடராஜபெருமானின் நடன நிலை யோகக்கலையின் உச்ச நிலையினை குறிக்கும் அம்சமாகும். சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும்.

  சென்னையில் கின்னஸ் சாதனை

  சென்னையில் கின்னஸ் சாதனை

  காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் யுவா மந்திரம் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்நாடு சுற்றுலா துறை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இணைந்து உலக யோகா திருவிழா 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 26 ம் தேதி மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் யோகாவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

  தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

  தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

  விழா நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், பத்மஸ்ரீ விருது பெற்ற நானாம்மாள், நடிகர் அஜய் ரத்தினம், யோகா பிரபலங்கள் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.

  யோகாவில் அசத்தல்

  யோகாவில் அசத்தல்

  சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர்,மலேசியா, அமெரிக்காவைச்சேர்ந்தவர்களும் கின்னஸ் சாதனையில் பங்கேற்றனர். பள்ளி,கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் யோகா செய்து அசத்தினர்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Guinness Record Created in doing Yoga at Chennai besant nagar Beach on august 26,2018.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more